Don't Miss!
- News
உச்சநீதிமன்றத்துக்கு புதிய 5 நீதிபதிகள்.. மத்திய அரசு ஒப்புதல்.. . யாரெல்லாம் தெரியுமா? முழுவிபரம்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பீஸ்ட் பட ஷூட்டிங் ஓவர்.. இயக்குநர் நெல்சனை கட்டியணைத்து பாராட்டிய விஜய்.. தெறிக்கும் டிரெண்டிங்!
சென்னை: பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் கடைசி நாளில் நடந்த உணர்சி மிகு தருணம் என இயக்குநர் நெல்சனை கட்டியணைத்து விஜய் பாராட்டும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு டிரெண்டாக்கி உள்ளது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய்.
டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் மற்றும் விஜய் காம்போவில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
பிரபு தேவாவின் கலக்கல் கெட்டப்பில் மை டியர் பூதம்... மோஷன் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

பீஸ்ட் ஷூட்டிங் ஓவர்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நெல்சனை அரவணைத்த விஜய்
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், தளபதி விஜய்யை விஜய்சேதுபதி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், இயக்குநர் நெல்சனை விஜய் கட்டியணைத்து பாராட்டிய புகைப்படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றுள்ளது.

பூஜா ஹெக்டே மகிழ்ச்சி
சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு நன்றி கூறினார். தளபதி விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் உடன் இணைந்து பாராட்டியது ரொம்பவே மகிழ்ச்சியான தருணம் என்றும் செம காமெடி ட்ரீட் ரசிகர்களுக்கு சம்மரில் காத்திருக்கிறது என்றும் பதிவிட்டு இருந்தார்.

ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ
பீஸ்ட் படத்தின் 100வது நாள் ஷூட்டிங் முடிந்து விட்டதாக சமீபத்தில் இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் படக்குழுவினர் செம ஜாலியாக மியூசிக் போட்டு பார்ட்டி பண்ணும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கினார். விரைவில் அனிருத் இசையில் பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸாக இப்படியொரு அப்டேட்டை சன் பிக்சர்ஸ் கொடுத்துள்ளது.

தெறிக்கும் டிரெண்டிங்
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை பல முறை ரிப்பீட் மோடில் பார்த்து சிரித்து கொண்டிருக்கும் ரசிகர்கள் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் எப்படி பிளாக் காமெடியில் பின்னி பெடலெடுத்து இருக்கப் போகிறார் என்பதை காண ரொம்ப ஆர்வமாக காத்திருக்கின்றனர். இயக்குநர் நெல்சன் மற்றும் விஜய்யின் படப்பிடிப்பு நிறைவு வெளியானதை அடுத்து தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் #Thalapathy ஹாஷ்டேக் போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.