twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெயிட்டிங்கிற்கு வொர்த்தா.. எப்படி இருக்கு மாஸ்டர் திரைப்படம்.. முழு ட்விட்டர் விமர்சனம் இதோ!

    |

    சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் எப்படி இருக்கு என ரசிகர்களும், விமர்சகர்களும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

    Recommended Video

    Master Audience Reaction | Thalapathy Vijay, Lokesh Kanagaraj, Vijay Sethupathi | Filmibeat tamil

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், மாஸ்டர் மகேந்திரன், விஜே ரம்யா, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

    அதிகாலை காட்சிக்கு அரசு அனுமதித்த நிலையில், தியேட்டர்கள் எல்லாம் திருவிழா கோலம் பூண்டுள்ளன.

    ரசிகர்களின் பேராதரவோடு வெளியானது தளபதியின் மாஸ்டர் அகிலமெங்கும் தெறிக்கும் வாத்தியின் ரெய்டு!! ரசிகர்களின் பேராதரவோடு வெளியானது தளபதியின் மாஸ்டர் அகிலமெங்கும் தெறிக்கும் வாத்தியின் ரெய்டு!!

    மாஸ்டர் வின்னர்

    இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் வின்னர் தான். இதுவரை பார்க்காத புதிய விஜய் படத்தை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். தனது நடிப்புத் திறமையால் வில்லனாக நடித்துள்ள விஜய்சேதுபதி ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டுகிறார். நிச்சயம் ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் தான்.

    கூஸ்பம்ப்ஸ் கிளைமேக்ஸ்

    படம் பார்த்து முடிச்சிட்டேன்.. மாஸ்டர் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படம். ஹீரோ மற்றும் வில்லன் பழி வாங்கும் கதை. கிளைமேக்ஸ் காட்சி தளபதி ரசிகர்களுக்கு அல்ட்ரா கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. இது 70 சதவீதம் விஜய் படம், 30 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படம்.

    ப்யூர் பிளாக்பஸ்டர்

    மாஸ்டர் படத்துக்கு என்னோட மார்க் 4.5/5. வாத்தி கம்மிங் ஒத்தே.. ஃபர்ஸ்ட் ஹாஃப் தீயாய் இருக்கு.. இரண்டாவது பாதி சூப்பர். நன்றி லோகேஷ் கனகராஜ், இப்படியொரு படத்தை கொடுத்ததற்கு, ப்யூர் பிளாக்பஸ்டர் என இந்த நெட்டிசன் மார்க் எல்லாம் கொடுத்து விமர்சித்துள்ளார்.

    லோகேஷ் ஏமாத்திட்டாரு

    மாநகரம், கைதி அளவுக்கு இல்லை. முழுக்க முழுக்க விஜய் படமாகவே இருக்கு மாஸ்டர். விஜய் மற்றும் விஜய்சேதுபதியின் நடிப்பு வேற லெவல் என்றாலும், லோகேஷ் கனகராஜ் திரைக்கதையில் ரொம்பவே ஏமாத்திட்டாரு.. ஒருமுறை பார்க்கும் படம் தான். ரசிகர்கள் மட்டுமே கொண்டாடுவார்கள் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

    சர்ப்ரைஸ் ரோல்

    ஜேடியின் ஆட்டிட்யூட், முதல் பாதி முழுக்க ரசிகர்களை ரசிக்க வைக்கும். பவானியின் வில்லத்தனம் நிச்சயம் மிரட்டும். மாஸ்டர் மகேந்திரன் கதாபாத்திரத்தில் சரியான சர்ப்ரைஸ் வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். யூனிக்கான அறிமுக காட்சி மற்றும் தரமான இன்டெர்வெல் சம்பவம். மொத்தத்தில் மாஸ்டர் தெறி தான்.

    சும்மா ஓட விடுறாரு

    பேருந்தில் ஓடிச் சென்று ஏறி, தளபதி விஜய் சண்டையிடும் காட்சி, நிச்சயம் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கான காட்சி தான். இளைஞர்கள், அங்கிள், ஆன்ட்டி என அனைவருக்கும் இன்ஸ்பிரேஷனாக விஜய் உள்ளார். தியேட்டரில் இருந்து விஜய்யை போல ரசிகர்களையும் சும்மா ஓடவிடுறாரு என இந்த நெட்டிசன் ட்வீட் போட்டுள்ளார்.

    மாஸ்க்கு பஞ்சமே இல்லை

    மாஸ்க்கு பஞ்சமே இல்லாத ஃபர்ஸ்ட் ஹாஃப்.. விஜய் மற்றும் விஜய்சேதுபதி சண்டையிடும் அந்த வெறித்தனமான கிளைமேக்ஸ் வேற லெவல். இருவருக்கும் சரி சமமான கதாபாத்திரத்தை கொடுத்து இயக்குநர் லோகேஷ் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளார். மாஸ்டர் கண்டிப்பா ஹிட் தான்.

    அல்டிமேட் கிளைமேக்ஸ்

    ஜேடி மற்றும் பவானி என இரு துருவங்களை கதாபாத்திரங்களாக வடிவமைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இருவருக்கும் நடிப்பதற்கு செம தீனி போட்டுள்ளார். கடைசியில் வரும் இருவருக்குமான அந்த சண்டை காட்சி அல்டிமேட் கிளைமேக்ஸ் என இவர் விமர்சித்துள்ளார்.

    பொங்கல் கொண்டாட்டம்

    பொங்கல் கொண்டாட்டம்

    எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால், மாஸ்டர் திரைப்படத்தை இந்த பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் வேற லெவலில் கொண்டாடலாம். 50 சதவீதம் இருக்கை என உத்தரவு போடப்பட்ட நிலையில், ஏகப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. மாஸ்டர் கொண்டாட்டம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு கொரோனா பாதுகாப்பும் முக்கியம். மாஸ்க் முக்கியம் மாஸ்டர் ரசிகர்களே!

    English summary
    Thalapathy Vijay’s Master twitter review and reactions is here. Thalapathians enjoyed the Vaathi raid in full celebration mode.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X