Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மாஸ் காட்டப்போகும் “வாரிசு“ இசை வெளியீட்டு விழா..தொகுப்பாளர் யார் தெரியுமா?
சென்னை : வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்குபவர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிப் படங்களில் நடிக்கிறார் என்றதுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இப்படத்தில், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பொங்கல்
ரிலீஸில்
வாரிசு
தான்
ஃபர்ஸ்ட்
சாய்ஸ்...
உதயநிதி
அப்படியான
ஆளு:
ஒப்பனாக
பேசிய
பார்த்திபன்!

வாரிசு
பீஸ்ட் திரைப்படத்திற்கு பின் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். குடும்ப சென்டிமெண்ட் கொண்ட இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மத்தானா நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இசை வெளியீட்டு விழா
தமிழில் இத்திரைப்படத்திற்கு வாரிசு என்றும் தெலுங்கில் வாரிசுடு என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது என அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த நிலையில், டிசம்பர் 24ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. விஜய் பேச்சை கேட்க ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர். மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

தொகுப்பாளர் யார் ?
இந்நிலையில், வாரிசு இசைவெளியீட்டு விழாவை பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகன் தொகுத்து வழங்க உள்ளார். இது குறித்து, ராஜூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விஜய்யின் 'வாரிசு' இசை வெளியீட்டு விழாவினை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சி. இதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

டெலிட் செய்துவிட்டார்
டிசம்பர் 24ஆம் தேதியில் இருந்து படத்தின் பாடல்கள் அனைத்தையும் கேட்க இருக்கிறீர்கள். நன்றி. என நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார். ஆனால், இந்த ட்வீட் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே ராஜூ இதனை டெலிட் செய்து விட்டார். ராஜூ அதனை நீக்கியதற்கான காரணம் தெரியவில்லை.

சுவாரசியமான சம்பம்
மேலும் இசைவெளியீட்டு விழாவின் மற்றொரு சுவாரசிய சம்பவம் நடக்க இருக்கிறது. இதில் இசையமைப்பாளர் அனிருத்தும் கலந்து கொள்ள இருப்பதாகவும், வாரிசு படத்தின் மூன்றாவது பாடலை அவர் நேரலையில் பாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமே வாரிசு இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.