தாமரை தான் டைட்டில் வின் பண்ணுவா...முதல் முறையாக ஓப்பனாக உடைத்து பேசிய அபிஷேக்

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து, தற்போது ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசன் இரண்டு மாதங்களை கடந்து விட்டது.

18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 2 பேர் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்கள் அடித்து, முட்டி மோதிக் கொள்வதை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இன்ஃபுலியன்ஸ் செய்த அபிஷேக்

இன்ஃபுலியன்ஸ் செய்த அபிஷேக்

இந்த சீசனில் ஆரம்பம் முதலேயே தனி ஆளாக கன்டென்ட் வழங்கி வந்தவர் அபிஷேக் ராஜா. வலிமையான போட்டியாளர் என கருதப்பட்ட அபிஷேக், சக போட்டியாளர்களை இன்ஃபுலியன்ஸ் செய்து, அவர்களின் கேமையும் இவரே ஆடுவதாக குற்றம்சாட்டப்பட்டார். இதனால் மக்களிடம் அவருக்கு குறைந்த அளவே ஆதரவு கிடைத்தது.

 வெளியேறிய அபிஷேக்

வெளியேறிய அபிஷேக்

இவரை எப்போது வெளியேற்றுவீர்கள் என ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். இதனையடுத்து 21 வது நாளில் எலிமினேட் செய்து வெளியேற்றப்பட்டார் அபிஷேக். பிறகு வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அபிஷேக் கடந்த வாரம் மீண்டும் எவிக்ட் செய்யப்பட்டார்.

ஒப்பனாக பேசிய அபிஷேக்

ஒப்பனாக பேசிய அபிஷேக்

இரண்டாவது முறையாக வீட்டிற்குள் வந்த போதும் பிரியங்காவை தனது கட்டுப்பாட்டில் அபிஷேக் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முதல் முறையாக ஓப்பனாக பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார் அபிஷேக் ராஜா.

அப்படி தான் விளையாடுவேன்

அப்படி தான் விளையாடுவேன்

அவர் தனது பேட்டியில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது என்னால் தான் கேமை ஃபன்னாக, ஜாலியாக விளையாடுவதாக பிரியங்கா என்னிடம் சொன்னாள். மற்றவர்களின் கேமையும் சேர்த்து ஆடுவது தான் என்னுடைய ஸ்டாட்டர்ஜி என்றால், அதை நான் தொடர்ந்து செய்வேன். ஒருவேளை மற்றொரு வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டால், ஒருவேளை பார்ப்பவர்களுக்கு அது தவறாக தெரிந்தால், அவர்களின் கேமை அவர்களுக்கே தெரியாமல் விளையாட முயற்சி செய்வேன்.

பிரியங்கா அக்கா இல்லை

பிரியங்கா அக்கா இல்லை

பிரியங்கா என் அக்கா கிடையாது. துர்கா தான் என் அக்கா. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் போட்டியாளர்களிடம் ஒரு ஒற்றுமை உள்ளது. என்ன தான் அடித்து சண்டை போட்டாலும், ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க மாட்டோம் என்ற அளவிற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் யாரும் கிடையாது. இந்த சீசனை தாமரை தான் வெற்றி பெறுவாள். இப்போது என்னை நாமினேட் செய்ய சொன்னால் தாமரை மற்றும் அண்ணாச்சியை நாமினேட் செய்வேன் என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

இமயமலை போனேன்

இமயமலை போனேன்

எவிக்ட் செய்த பிறகு மன அமைதிக்காக இமயமலை சென்று விட்டேன். திரும்பி வந்த போது தான் வைல்ட் கார்டு என்ட்ரிக்கு தயாராகுங்கள் என மெசேஜ் வந்தது என்றார். பிரியங்கா பற்றி பேட்டியில் அபிஷேக் இப்படி கூறி இருக்கையில், வீட்டிற்குள் அபிஷேக் போனது பற்றி கவலை பட்ட பிரியங்கா, அன்பிற்காக ஏங்கிய பையன் அது முழுவதுமாக கிடைக்காமல் ஏக்கத்துடனேயே போய் விட்டான் என அண்ணாச்சியிடம் சொல்லி அழுதார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X