பிரியங்காவா? தாமரையா?...யார் செய்தது தவறு...யாருக்கு ரெட் கார்டு கொடுக்கனும் ?
சென்னை : பிக்பாசில் நேற்று நடைபெற்ற முட்டை டாஸ்கில் பிரியங்கா செய்தது தவறா அல்லது தாமரை செய்தது தவறா, யாருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும், மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தான் நேற்று முதல் சோஷியல் மீடியாவில் நடைபெற்று வரும் மிகப் பெரிய விவாதமாக உள்ளது.
டிக்கெட் டு ஃபினாலேவை வெல்வதற்கான போட்டியில் முதல் நாளில் நிரூப் வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 7 பேருக்கு முட்டை டாஸ்க் வழங்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளரும் தங்களிடம் உள்ள முட்டையை யாரும் உடைக்காமல் பாதுகாக்க வேண்டும். அதே சமயம் மற்றவர்களின் முட்டையை உடைக்க வேண்டும். இறுதியில் குறைவான முட்டைகளை வைத்திருக்கும் இரண்டு நபர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என கூறப்பட்டது.

குறிவைக்கப்பட்ட தாமரை, பாவனி
இதில் அமீர், தாமரையிடம் இருக்கும் முட்டைகளையும், ராஜு மற்றும் சிபி ஆகியோர் பாவனியிடம் இருக்கும் முட்டைகளையும் உடைக்க முயற்சி செய்தனர். ஆனால் பிரியங்கா, அமீர் மற்றும் சஞ்சீவ்வை தன்னுடன் சேர்த்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார். பிரியங்கா, தன்னிடம் உள்ள முட்டையை அமீரிடமும், அவரிடம் இருக்கும் முட்டையை தன்னிடமும் மாறி மாறி வைத்துக் கொண்டிருந்தார்.

வேடிக்கை பார்த்த தாமரை
சஞ்சீவிடம் முட்டைகளை வாங்கிக் கொண்டார். பிறகு தனது முட்டைகளை அவரிடம் கொடுத்து பாதுகாக்க சொன்னார். பிரியங்கா, தனது முட்டையை எடுத்த போது அதை தடுக்க கூட அமீர் முயற்சி செய்யவில்லை. அதே சமயம் தாமரையிடம் இருக்கும் முட்டைகளை உடைத்தார். ஆரம்பத்தில் முட்டையை பாதுகாக்க முயற்சித்த தாமரை, அமீர் முட்டைகளை உடைக்கும் போது அதை தடுக்க கூட முயற்சி செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அடிதடி சண்டை
சஞ்சீவ் மற்றும் அமீருடன் சேர்ந்து கொண்டு பிரியங்கா விளையாடுவதை பார்த்த தாமரை, பிரியங்காவிடம் வாக்குவாதம் செய்தார். பிறகு அது அடிதடி சண்டை அளவிற்கு பெரிதானது. இந்த சண்டை உச்சத்திற்கு சென்று, பிரியங்காவை பார்த்து தாமரை, நீயெல்லாம் ஒரு பொம்பளையா என கேட்டார். பிரியங்காவும், தாமரையை பார்த்து "த்தூ" என்றார். தாமரையும், பிரியங்காவும் மாறி மாறி தள்ளி விட்டுக் கொண்டனர்.

தாமரைக்கு ரெட் கார்டு கேட்கும் ரசிகர்கள்
இவர்களின் சண்டையை மற்றவர்கள் யாரும் தடுக்கவோ, சமாதானம் செய்யவோ முயற்சிக்கவில்லை. ஆனால் பிரியங்கா - தாமரை இடையேயான சண்டையை வைத்து மிகப் பெரிய விவாதமே சோஷியல் மீடியாவில் நடந்து வருகிறது. பிரியங்காவின் ஆதரவாளர்கள், தாமரை நடிக்கிறார். அவரின் மோசமான முகம் வெளிப்பட்டு விட்டது. பிரியங்காவை அவர் தள்ளி விட்டது தவறு. தாமரைக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என பலவிதமாக தாமரையை திட்டி தீர்க்கின்றனர்.

முதலில் பிரியங்காவிற்கு கொடுங்க
அதே சமயம் தாமரையின் ஆதரவாளர்கள் இவர்களின் சண்டை வீடியோ க்ளிப்பிங்களை போட்டு, முதலில் தள்ளி விட்டது பிரியங்கா தான். தாமரை ஒரு முறை தள்ளினார். ஆனால் பிரியங்கா தொடர்ந்து பல முறை தள்ளியதுடன் தாமரை தான் தவறு செய்தார் என்பதை போல் பிக்பாஸ், பிக்பாஸ் என கத்தினார். தனக்கு நிரூப்புடன் மோதும் அளவிற்கு உடல் வலிமை கிடையாது என கூறி அவரை வெளியேற்றிய பிரியங்கா, மாநாடு டாஸ்கின் போது நிரூப்பை தள்ளி விட்டு, கொடியை எடுக்கிறார், பாவனியை அலேக்காக தூக்கிக் கொண்டு நடக்கிறார். உடல் வலிமை இல்லை என்றால் இது எப்படி முடியும். முதலில் அவருக்கு ரெட் கார்டு கொடுங்கள். பிறகு தாமரைக்கு ரெட் கார்டு கொடுக்கலாம் என கூறி வருகிறார்கள்.
Recommended Video

குறும்படமே வேணாமே
தாமரை மற்றும் பிரியங்காவின் ரசிகர்கள், #Priyanka, #Thamarai போன்ற ஹாஷ்டேக்குகளை உருவாக்கி அதை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். இதில் பிக்பாஸ் குறும்படம் போட தேவையேயில்லை என்னும் அளவிற்கு அதிகமானவர்கள் இவர்களின் சண்டை பற்றிய வீடியோக்களை பகிர்ந்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்து பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











