Don't Miss!
- News
இது தமிழ்நாடா அல்லது வட மாநிலமா? வட மாநிலத்தவர்கள் அட்டூழியம் அதிகரிப்பு! கொதிக்கும் வேல்முருகன்!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Lifestyle
கலோரிகள் குறைவாக உள்ள இந்த 7 உணவுகள சாப்பிட்டா... உங்க எடை டக்குனு குறைஞ்சிடுமாம்...!
- Technology
Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா? போட்டோ கூட ரிட்டன் வருமா?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சுவாரஸ்யம் தேடும் பிரியங்கா...பணத்தை ஏன் எடுக்கல... பிக்பாஸிற்கு பின் தாமரையின் முதல் கலகல பேட்டி
சென்னை : அக்டோபர் 3 ம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஃபினாலே வாரத்திற்குள் நுழைந்துள்ளது. இறுதிப் போட்டியாளர்களாக 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று தாமரை வெளியேற்றப்பட்டார். தாமரை வெளியேற்றப்பட்டதை கமலே ஏற்கவில்லை. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தாமரை, ஐக்கி பெர்ரியுடன் வீடியோ காலில் பேசி உள்ளார். லைவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளை ஐக்கி வாசிக்க, அதற்கு தாமரை பதிலளித்தார்.
டால்ஃபினுக்கு
முத்தம்
கொடுக்கும்
ராய்
லட்சுமி..பாக்கும்
போதே
பதறுதே..தெறிக்கவிடும்
புகைப்படங்கள்
!

சுவாரஸ்யம் தேடும் பிரியங்கா
அப்போது பேசிய தாமரையிடம் பிரியங்கா பற்றி கூறும் படி ரசிகர்கள் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த தாமரை, பிரியங்கா நன்றாக தான் பேசிக் கொண்டிருந்தார். கண்ணாடி டாஸ்க்கிற்கு பிறகு தான் அவர் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தார். சுவாரஸ்யம் வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். அதற்காக தான் அனைத்தையும் செய்கிறார்.

நான் நடிக்கவில்லை
நான் இயல்பாக கிராமத்தில் எப்படி இருப்பேனோ, அப்படி தான் பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் இருந்துள்ளேன். ஆனால் இவர்களுக்கு அது புதிதாக இருப்பதால் நான் நடிப்பது போல் தோன்றுகிறது. எனக்கு என்ன என் புருஷனும், மாமியாரும் வீட்டிற்குள் வைத்து டாஸ்க் வைத்து, டிரெயினிங் கொடுத்தா அனுப்பி இருக்கிறார்கள். தெரியாததை தெரியாது என்று சொல்லி தானே கேட்க முடியும். அதை நடிக்கிறேன் என்கிறார்கள்.

பிக்பாசில் எனது நண்பர்கள்
நான் இன்னும் என்ன காட்டினார்கள் என பார்க்கவில்லை. பார்த்த பிறகு டாஸ்க்கின் போது என்ன நடந்தது என கூறுகிறேன். நான் எல்லோருக்காகவும் இரக்கப்பட்டேன். ஆனால் எதற்காக அனைவரும் என்னை ஒதுக்கினார்கள் என எனக்கு தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டில் ஐக்கி எனக்கு பொண்ணு மாதிரி. நல்ல நண்பர்கள் என்றால் அக்ஷரா, வருண்.

பணத்தை எடுக்காதது ஏன்?
நான் அந்த பணத்தை எடுத்திருந்தால் எனது கடன் தீர்ந்திருக்கும். ஆனால் அந்த பணத்தை எடுத்திருந்தால் என் ஒருத்திக்காக நான் விளையாடியதை போல் ஆகி இருக்கும். எனக்கு சோறு போட்டது இந்த கலைத்துறை. இந்த துறையினர் என்னை எதிர்ப்பார்த்திருந்தனர். அவர்களை ஏமாற்றி விடக்கூடாது. அவர்கள் சார்பாக நான் வந்திருக்கிறேன். இந்த பணத்தை சம்பாதித்து விடலாம் என நினைத்து தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்றார் தாமரை.

தாமரை கணவர் சொன்னது ஏன்?
தாமரை சொன்னதை கேட்ட ஐக்கியும், நீங்கள் வீட்டிற்குள் இருந்த போது இதே பதிலை தான் உங்கள் கணவரும் சொன்னார். தாமரை அந்த பணத்தை எடுக்கக் கூடாது. எடுக்க மாட்டாள். அவள் நாடக உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று தான் சொன்னார் என்றார்.
Recommended Video

தாமரைக்கு சொந்த வீடு இருக்கா?
உங்களுக்கு சொந்த வீடு இருக்கா என ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த தாமரை, சொந்த வீடு இருக்கு. ஆனால் பேங்கிற்கு எழுதி கொடுத்திருக்கிறேன். வாடகை வீடாக மாறி மாறி சோர்ந்து போனதால் கடன் வாங்கி சொந்தமாக வீடு கட்டினேன். வீடு கட்டி முடித்ததும், லாக்டவுன் வந்ததால் நாடகங்கள் இல்லாமல் போனது. அதனால் வீட்டை பேங்க்கில் அடமானம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.