ஒரே ஒரு பொட்டு.. ஒட்டுமொத்த பிரியங்கா, தாமரை சண்டை பஞ்சாயத்தும் ஓவர்.. இன்னைக்கு புதன்கிழமை தானே?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் என்ன ஒரு சண்டை வெடித்தாலும் போட்டியாளர்களே அதனை சமாளித்து சமாதானம் ஆகி கமல் சாருக்கே வேலை இல்லாமல் செய்து வருகின்றனர்.
இந்த வாரம் பிரியங்கா மற்றும் தாமரை சண்டையை பார்த்து டென்ஷனாகி ரசிகர்கள் வெளியில் பைத்தியம் பிடிக்காத குறையாக விவாதித்துக் கொண்டிருக்க ஒரே ஒரு பொட்டு வைத்து ஒட்டுமொத்த பஞ்சாயத்தையும் முடித்து விட்டனர்.
போங்க போய் புள்ளை குட்டிங்கள படிக்க வைங்க என நெட்டிசன்கள் பிரியங்கா vs தாமரை ஆர்மியினரை கலாய்த்து வருகின்றனர்.

யார் மீது தப்பு?
தாமரை தான் பிரியங்காவை அடித்து தள்ளினார் என்றும் பிரியங்கா தான் தாமரையை முதலில் காலால் உதைத்து அட்டாக் பண்ணார் என்றும் தாமரை ஆதரவாளர்களும் பிரியங்காவின் ரசிகர்களும் போட்டி போட்டு ஏகப்பட்ட குறும்படங்களை போட்டு வருகின்றனர்.

பிரியங்கா ஆர்மி கதறல்
பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை தாக்கினால் அவர்களுக்கு உடனடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியே ஏற்ற வேண்டும் என பிரியங்கா ரசிகர்கள் பொங்கி எழுந்த நிலையில், ஒரே ஒரு அன்சீன் காட்சி ஒட்டுமொத்த பஞ்சாயத்துக்கும் வேட்டு வைத்துள்ளது.

ஒரே ஒரு பொட்டு
பாவனி ராஜுவுக்கு எதிராக பொங்கி எழுந்த காட்சிக்கு பிறகு ஏகப்பட்ட பாவனி ரசிகர்கள் ராஜுவுக்கு எதிராக பொங்கி எழுந்தனர். ஆனால், கடைசியில் அடுத்த புரமோவில் ராஜுவை கட்டிப் பிடித்து பாவனி சமாதானம் ஆனதை பார்த்து ஆஃப் ஆகி விட்டனர். அதே போல தற்போது தாமரை வைத்த ஒரே ஒரு பொட்டு இந்த பஞ்சாயத்தை முடித்து இருக்கிறது.

தாமரை செய்த செயல்
கலர் அடித்து பிடிக்காத இரு நபரை வெளியேற்ற வேண்டும் என்கிற அடுத்த அதிபயங்கரமான பிசிக்கல் டாஸ்க்கில் பிரியங்காவின் கட் அவுட்டுக்கு அழகாக பொட்டு வைத்து தாமரை இந்த வாரமும் உலக நாயகனுக்கு எந்தவொரு வேலையும் இல்லாமல் செய்து விட்டார்.

சாப்பாடு கொடுத்தாலே போதும்
நிரூப் மற்றும் பிரியங்காவுக்கு இடையே கடும் சண்டை வெடித்த நிலையில், நேற்று சாப்பாடு கொடுத்தே நிரூப் பிரியங்காவை கரெக்ட் செய்து விட்டார். அதே போல தாமரை செல்வியும் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொட்டு வைத்தே பிரியங்காவின் கோபத்தை அமைதி ஆக்கி உள்ளார் தாமரை.

புதன்கிழமை தானே
இதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இன்று வெள்ளிக்கிழமை கூட இல்லையே.. வெறும் புதன்கிழமை தானே அதற்குள் தாமரையும் பிரியங்காவும் இப்படி ஒண்ணு சேர்ந்துட்டாங்களே என நினைத்து இவங்களலாம் நம்பக் கூடாது தாமரை சொன்னது போலவே இதுவும் பக்கா ஸ்க்ரிப்ட் என புலம்பி விட்டு கடையை சாத்திக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications











