For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என் பிள்ளையை பார்த்து 4 மாசமாச்சு.. கதறி அழும் தலைவி தாமரை செல்வி.. வெளியானது முதல் புரமோ!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 ஆரம்பித்து இரண்டாவது வாரத்திலும் அதே அழுகாச்சி கதையே ஓடிக் கொண்டிருக்கிறது.

  நடுவே பிசிக்கல் டாஸ்க் கொடுத்தார்களே என்று பார்த்தால், அதுவும் எல்கேஜி பிள்ளைகள் விளையாடும் பலூன் உடைக்கும் விளையாட்டாக அமைந்தது.

  பிரைவசி கேட்கக் கூடாது.. பிடிக்கலைன்னா வெளியே போ.. சர்வைவர் போட்டியாளர்களை மிரட்டுகிறாரா அர்ஜுன்?பிரைவசி கேட்கக் கூடாது.. பிடிக்கலைன்னா வெளியே போ.. சர்வைவர் போட்டியாளர்களை மிரட்டுகிறாரா அர்ஜுன்?

  அதில், திறமையாக செயல்பட்டு தலைவியான தாமரை செல்வியின் கண்ணீர் கதை தான் இன்றைய முதல் புரமோவாக அமைந்துள்ளது.

  ரொம்ப அழுகாச்சி

  ரொம்ப அழுகாச்சி

  பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் பல தரப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்த சீசன் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு டைரக்‌ஷன் டீம் அதே பழையட் டீம் தானே என்பது தெரியாமல் போய் விட்டது. அதே அழுகாச்சி சீரியலையே பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அரங்கேற்றி வருகின்றனர்.

  சர்வைவரே சூப்பர்

  சர்வைவரே சூப்பர்

  கடந்த இரு வாரமாக ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களின் சொந்த சோக கதைகளை சொல்லி எந்தளவுக்கு ரசிகர்களை இரிடேட் செய்ய முடியுமோ செய்து வருகின்றனர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சர்வைவர் தமிழே சூப்பரா இருக்கு என்றும் சில ரசிகர்கள் விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழ் பக்கம் தாவ ஆரம்பித்துள்ளனர்.

  தாமரை செல்வி கதை

  தாமரை செல்வி கதை

  ஆனாலும், எதை பற்றியும் கவலைப்படாமல் தங்கள் பாணியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வழக்கம் போல சென்று கொண்டிருக்கிறது. இன்றைய முதல் புரமோவில் பிக் பாஸ் வீட்டின் தலைவியாக இருக்கும் தாமரை செல்வி தனது கண்ணீர் கதையை சொல்லி அழுவதை காண்பித்துள்ளனர்.

  பையனை காட்டவே இல்லை

  பையனை காட்டவே இல்லை

  "என் பையனை என்கிட்ட காட்டவே இல்லை.. என் பையனை தேடிப் போனேன்.. அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியல.. அவன் இங்கேயே இருந்திக்கிறேன்னு சொல்லிட்டான்.. என் பையனை பார்த்து 4 மாசமாச்சு.. என் பையன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவனுக்காத்தான் இங்கே வந்தேன்" என தாமரை செல்வி கதறி அழ சக போட்டியாளர்கள் கண்கள் குளமாகிய புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

  மகனுக்கு என்ன ஆச்சு

  மகனுக்கு என்ன ஆச்சு

  தாமரை செல்வியின் கண்ணீர் கதையை புரமோவில் பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் அவரது மகனுக்கு என்ன பிரச்சனை என்பதை அறிந்து கொள்ள நிச்சயம் இன்றைய எபிசோடை பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புரமோவிலேயே எல்லாத்தையும் சொல்லிட்டா அப்புறம் புராகிராமை யாருமே பார்க்க மாட்டார்களே என எடிட்டர் இப்படி புரமோவை கட் செய்துள்ளார் என்றும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

  இந்த வாரம் எஸ்கேப்

  இந்த வாரம் எஸ்கேப்

  பலூன் டாஸ்க்கில் வெற்றிப் பெற்ற நிலையில், தலைவியான தாமரை செல்வி இந்த வாரம் எவிக்‌ஷனில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டார். இந்த வீட்டில் கொஞ்ச நாள் இருக்கணும்.. அதுக்குள்ள ஏன் அனுப்ப பார்க்குறீங்க என சக போட்டியாளர்களிடம் அவர் பேசிய நிலையில், தலைவியாகி தப்பித்து விட்டார்.

  நதியாவுக்கு ஆதரவு

  நதியாவுக்கு ஆதரவு

  அபிஷேக் ராஜா நதியா சங்கை வனிதாவுடன் கம்பேர் பண்ணி பேசிய நிலையில், நதியா சங் நிச்சயம் ஒரு நல்ல கேம் ஆடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர். அதனால், இந்த வாரம் நதியா வெளியேறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் சின்னப் பொண்ணு தான் வெளியேறுவார் என்றும் ரசிகர்கள் அடித்து சொல்லி வருகின்றனர். எதிர்பாராததை எதிர்பார்க்க போகிறோமா? அல்லது எதிர்பார்த்ததையே காணப் போகிறோமா என்பதை வெயிட் பண்ணி வீக்கெண்ட்டில் பார்ப்போம்.

  English summary
  Thamarai Selvi talks about his son in Bigg Boss Tamil 5 Day 10 promo 1 out now and goes viral in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X