Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சாணியில் மூழ்கி டாஸ்கை வென்ற தாமரை... பயந்து தெறித்து ஓடிய ஹவுஸ்மேட்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ல் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரையும் நாமினேட் செய்வதாக பிக்பாஸ் கூறி இருந்தார். இதனால் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்காக போட்டியாளர்களுக்கு 8 போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த டாஸ்குகளில் போட்டியாளர்கள் வெற்றி பெறாமல் இருக்க பல தடைகள் ஏற்படுத்தப்பட்டது.
இன்று
தண்டனை
பெற்ற
அந்த
6
பேர்....இவங்க
தான்
ஆனால் இந்த தடைகள், சக போட்டியாளர்களின் சண்டைகள், மோதல்கள் என பலவற்றை தாண்டி 6 டாஸ்குகளில் வெற்றி பெற்றார் தாமரை. ஏழாவது டாஸ்க் நிகழ்ச்சியின் 74 வது நாளான இன்று நடத்தப்பட்டது. இதில் தாமரை, அமீர், அபினய் ஆகிய மூன்று பேர் பங்கேற்றனர். நடுவராக ராஜு இருந்தார்.

சாணி தொட்டி டாஸ்க்
சாணி நிரப்பப்பட்டுள்ள தொட்டியில் காயின்கள் இருக்கும். போட்டியாளர்கள் தொட்டிக்குள் இறங்கி காயினை தேடி, தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பவுலில் சேகரிக்க வேண்டும். கடைசியில் யார் அதிக காயின்களை சேகரிக்கிறார்களோ அவரே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என தெரிவிக்கப்பட்டது. கடந்த சீசனிலும் இதே போல் சாணி தொட்டிக்குள் அதிக நேரம் யார் இருக்கிறார்கள் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற தாமரை
இந்த டாஸ்க்கில் தாமரை அதிகபட்சமாக 28 காயின்களை சேகரித்தார். அவரைத் தொடர்ந்து அபினய் 19 காயின்களை சேகரித்திருந்தார். அமீர் 17 காயின்களை மட்டுமே சேகரித்திருந்தார். குறைவான காயின்களை சேகரித்த அமீர் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். எட்டாவது டாஸ்க்கில் பங்கேற்க தாமரை மற்றும் அபினய் முன்னேறினர்.

அலறி ஓடிய போட்டியாளர்கள்
சாணி இருந்த தொட்டிக்குள் இறங்கி தேடியதால் உடல் முழுவதும் சாணியாக இருந்த தாமரை, தான் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ஹவுஸ்மேட்கள் ஒவ்வொருவரையாக சென்று கட்டிப்பிடிக்க ஓடினார். சாணியுடன் வந்த தாமரையை பார்த்து மற்ற போட்டியாளர்கள் தெறிவித்து ஓடினர்.

காலில் கூட விழுகிறேன்
இருந்தாலும் விடாமல் நிரூப் மீது சாணியை ஒட்ட வைத்தார் தாமரை. தொடர்ந்து சஞ்சவ், வருண், சிபி ஆகியோர், அக்கா வேண்டாம். வெற்றி பெற்ற சந்தோஷத்தில் பைத்தியம்பிடித்தது போல் செய்கிறாய். நாங்கள் குளித்து விட்டோம் என்றனர். ஆனால் சிபியின் அருகில் தாமரை செல்ல, சுவரோடு சுவராக ஒட்டி நின்ற சிபி, உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன் என்னை விட்டு விடு என கெஞ்சுகிறார்.

பாசத்தை காட்ட இதுவா நேரம்
நான் வெற்றி பெற்றதில் உனக்கு சந்தோஷம் இல்லையா என பரிதாபமாக தாமரை கேட்க, சந்தோஷம் தான். ஆனால் பக்கத்தில் வராதே எனக்கு வாந்தி வரும் என கெஞ்சுகிறார் சிபி. உனக்கு பாசத்தை காட்ட வேற நேரமே கிடைக்கலையா என அழுகாத குறையாக கெஞ்சுகிறார்.