உண்மையை கூறிய இயக்குனர்கள்... மேடையில் அழுத தம்பி ராமையா!
பிரபல இயக்குனர்கள் பேசியதை கேட்டு நடிகர் தம்பி ராமையா கண்கலங்கினார்.
Recommended Video

சென்னை: 'மணியார் குடும்பம்' பட விழாவில் பிரபு சாலமன், சேரன் உள்ளிட்ட இயக்குனர்கள் பேசியதை கேட்டு நடிகர் தம்பி ராமையா மேடையிலேயே கண்கலங்கினார்.

வி.யு.சினிமாஸ் சார்பில் தேன்மொழி சுக்ரா தயாரித்து, நடிகர் தம்பி ராமையா இயக்கி, இசையமைத்துள்ள படம் மணியார் குடும்பம். தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக புதுமுகம் மிருதுளா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

'மணியார் குடும்பம்' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுது. பிரபல இயக்குனர்கள் பாக்கியராஜ், சேரன், பிரபு சாலமன், மோகன் ராஜா, கரு.பழனியப்பன், சிறுத்தை சிவா, கௌரவ், நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, டிரெய்லர் மற்றும் இசையை வெளியிட்டனர்.

விழாவில் பேசிய இயக்குனர் பிரபு சாலமன், மைனா படத்திற்குள் தம்பி ராமையா எப்படி வந்தார், அவர் பட்ட கஷ்டங்கள் என்ன என்பது குறித்து நினைவு கூர்ந்தார். அதேபோல, சேரன் பேசும்போது, தம்பி ராமையா தனது தாய் மீது வைத்திருக்கும் பாசம் குறித்து பேசினார். கரு.பழனியப்பன், அவரது மனைவி குறித்து பேசினார். இவர்கள் பேசும் போது, மேடையிலேயே கண்கலங்கினார். இது விழாவுக்கு வந்த அனைவரையும் நெகிழ வைத்தது.


Click it and Unblock the Notifications











