Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மகனுக்காக மீண்டும் இயக்குநராகும் தம்பி ராமையா! - என்ன கதை?
சென்னை : நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமான 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படம் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸானது. ஆனால், அந்தப் படம் சரியாகப் போகவில்லை.
இந்நிலையில், தம்பி ராமையா தனது மகனை நாயகனாக வைத்து 'உலகம் விலைக்கு வருது' எனும் படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது எனக் கூறியுள்ளார் தம்பி ராமையா.

இயக்குநர் தம்பி ராமையா :
முரளி நடித்த 'மனுநீதி' படத்தின் முலம் இயக்குனராக சினிமாவில் அடியெடுத்து வைத்த தம்பி ராமையா, வடிவேலுவை ஹீரோவாக வைத்து 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' எனும் படத்தை இயக்கினார்.

குணச்சித்திர நடிகர் :
'மைனா' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா, காமெடியனாக மட்டுமில்லாமல், குணச்சித்திர நடிகராகவும் சினிமாவில் கலக்கி வருகிறார்.

மீண்டும் இயக்கம் :
இவர் தற்போது தன் மகன் உமாபதியை வைத்து 'உலகம் விலைக்கு வருது' படத்தை இயக்கவிருக்கிறார். இதில் சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் எனப் பலரும் நடிக்கிறார்கள். ஹீரோயினுக்கான செலக்ஷன் நடைபெற்று வருகிறதாம்.

சார்லி சாப்ளின் :
இந்தப் படம், உலகப்புகழ் பெற்ற நடிகர் சார்லி சாப்ளினின் 'மழை பெய்யும்போது குடை பிடிக்காமல் நடந்துபோவது பிடிக்கும். அப்போதுதான், நான் அழுவது யாருக்கும் தெரியாது' (I love to walk in the rain because nobody can see my tears) என்ற வரிகளை மையப்படுத்திய படமாம்.