»   »  நயன் தாராவுக்கு அப்பாவான தம்பி ராமய்யா!

நயன் தாராவுக்கு அப்பாவான தம்பி ராமய்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வடிவேலு இல்லாத குறையை தீர்ப்பவர்களில் தம்பி ராமய்யா தான் பெஸ்ட். காமெடி ப்ளஸ் குணச்சித்திர வேடம் என்றாலே கூப்பிடு தம்பி ராமய்யாவை என்னும் அளவுக்கு பிஸி.

எல்லா ரோல்களிலும் வெளுத்து வாங்கும் தம்பி ராமய்யாவுக்கு அப்பா கேரக்டர் என்றால் மட்டும் லேசான அலர்ஜியாம். அதிலும் ஹீரோ, ஹீரோயின் போன்ற முக்கிய கேரக்டர்களுக்கு அப்பா என்றாலே ஒதுங்கி விடுகிறார். தனி ஒருவனில் முழுக் கதையையும் கேட்டபிறகு தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்பதாலேயே மறுக்க முடியாமல் நடித்தார்.

Thambi Ramaiya turns Nayanthara's father

இப்போது டோரா படத்தில் நயன் தாராவுக்கு அப்பாவாக நடிக்கிறாராம். பேய் படமான இதிலும் தம்பி ராமய்யாவுக்கு முக்கிய கேரக்டர். பேய் புகுந்த கார் தானாக சென்று பழி வாங்குவது போல அமைக்கப்பட்டுள்ள கதையில் காமெடிக்கு தம்பி ராமய்யா கேரண்டியாம்.

இது ஆல்ரெடி நிறைய படங்கள்ல வந்த கதையாச்சே... நயன் தாரா இவ்வளவு வீக்காகவா கதை செலக்ட் பண்றீங்க?

English summary
Thambi Ramaiya is playing as Nayanthara's father in Dora movie .

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil