பா. ரஞ்சித் தயாரிப்பு.. அட்டகத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவான ‘தண்டகாரண்யம்’ டீசர் ரிலீஸ்!

சென்னை: இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இயக்கியுள்ள தண்டகாரண்யம் படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மெட்ராஸ் கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.

படத்தின் டீஸர் வெளியானதிலிருந்து, ரசிகர்கள் படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். படத்தின் கதைக்களம் காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை டீஸர் மூலம் அறியலாம். தண்டகாரண்யம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த டீஸர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

லப்பர் பந்து படத்தைத் தொடர்ந்து அட்டகத்தி தினேஷ் நடிக்கும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியான இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்திலும் அட்டகத்தி தினேஷ் தான் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்க கிராமத்தில் ஒவ்வொரு பொண்ணும் பிறக்கும் போது ஒரு கிழங்கு உருவாகும் என்றும் அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென்றால் அந்த கிழங்கை கண்டுபிடித்து எடுக்க வேண்டும் என வித்தியாசமான கதைக்களத்துடன் கலையரசனின் காதலி பேசுவது போல கதை செல்கிறது.

கிழங்கை எடுக்கச் சென்ற என் மாமா இன்னும் திரும்பி வரவில்லை என ஹீரோயின் குரல் சோகத்துடன் பேச, ஏகப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன. காந்தாரா படம் போல இந்த படத்தின் கதையும் இருக்குமா? என்கிற கேள்விகள் டீசரை பார்த்தாலே எழுகிறது. வரும் செப்டம்பர் 17ம் தேதி தண்டக்காரண்யம் படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

பா. ரஞ்சித் தயாரிப்பில் தொடர்ந்து வித்தியாசமான படங்களும் நல்ல நல்ல திரைக்கதைகளும் வெளியாகி வருகின்றன. தங்கலான் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், ஆர்யாவை வைத்து வேட்டுவம் படத்தை இயக்கி வரும் பா. ரஞ்சித் தயாரிப்பு பணிகளிலும் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X