»   »  'தமிழ் என்னைக்குமே தோக்காதுடா'... தங்கமகனைத் தாங்கும் ரசிகர்கள்

'தமிழ் என்னைக்குமே தோக்காதுடா'... தங்கமகனைத் தாங்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலரின் நடிப்பில் இன்று உலகெங்கும் வெளியாகியிருக்கும் தங்கமகன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.

வேல்ராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் தமிழ்நாடு முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்திற்கு எதிராக எந்தப் படமும் இன்று வெளியாகவில்லை என்பது படத்தின் பெரும்பலமாக மாறியிருக்கிறது.


சுமார் 400 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் தங்கமகனுக்கு ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதைக் காணலாம்.


தமிழ்நாட்ல

"தமிழ்நாட்ல தமிழ் தோக்கவே முடியாதுடா" என்று படத்தின் வசனத்தையே தனது கருத்தாக பதிவு செய்திருக்கிறார் கார்த்திகா.


தனுஷ் - சமந்தா

"தனுஷ் சமந்தா ஜோடி சூப்பர். குடும்பத்துடன் பார்த்து மகிழ தரமான படம் மனம் நெகிழ ரசித்தேன்" என்று படத்தைப் பற்றி கூறியிருக்கிறார் விஜய் தீவிர பக்தன்.
கண் சிமிட்ட

கண் சிமிட்ட கூட பயம் !!!எங்கே ஓரு காதல் காட்சியை விட்டுவிடுவோமா என்று" பவி ராஜனின் பயமிது.
வசனங்கள் காரசாரம்

திரையரங்கில் ரசிகா்கள் ஆரவாரம்.இனி தங்கமகனை குடும்பங்கள் கொண்டாடும் வாரா வாரம். வசனங்கள் கார சாரம்" என்று ரைமிங்காக கருத்து சொல்லியிருக்கிறார் தமிழரசன்.
முதல் பாதி

தங்கமகன் முதல் பாதி காதலும் காதலால் ஏற்படும் முறிவுமாக கதை நகர்கிறது. 2 வது பாதி சண்டைக் காட்சிகளும், அன்பும் நிரம்பி உள்ளது. கண்டிப்பாக குடும்பத்துடன் இந்தப் படத்தை பார்க்கலாம். எனது மதிப்பெண் 4/5 என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார் கார்த்திக் காப்.


மொத்தத்தில் இன்று வெளியாகி இருக்கும் தங்கமகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
English summary
Dhanush - Samantha Starrer Thanga Magan Worldwide Released Today - Audience Live Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil