»   »  தங்க மகனாக மாறிய தனுஷ்...பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீடு

தங்க மகனாக மாறிய தனுஷ்...பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலை இல்லாப் பட்டதாரி 2 என்று இதுநாள்வரை அழைக்கப்பட்டு வந்த நடிகர் தனுஷின் படத்திற்கு தங்கமகன் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

மாப்பிள்ளை, பொல்லாதவன், படிக்காதவன் போன்ற படங்களைத் தொடர்ந்து 4 வது முறையாக தனது மாமனார் ரஜினியின் தலைப்பை தனது படத்திற்கு வைத்திருக்கிறார் தனுஷ்.

Thanga Magan First Look Poster Revealed

தங்கமகன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில், வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் எமிஜாக்ஸன் நாயகியாக நடித்துவரும் படம் தங்கமகன்.

கதைப்படி தனுஷின் இளமைக்கால காதலியாக எமி ஜாக்சனும், மனைவியாக சமந்தாவும் நடித்திருக்கின்றனர் என்பது படத்தின் போஸ்டர்களில் இருந்து தெரிகிறது.

Thanga Magan First Look Poster Revealed

வேலை இல்லாப் பட்டதாரி படத்திற்கும் தங்கமகன் படத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தனுஷ் ஏற்கனவே கூறியிருக்கிறார். அதனை வெளிக்காட்டுவது போலவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் அமைந்து இருக்கின்றன.

Thanga Magan First Look Poster Revealed

தங்கமகன் படத்தில் தனுஷின் அப்பா, அம்மாவாக ராதிகா சரத்குமார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் நடித்திருக்கின்றனர்.மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் தீபாவளி வெளியீடாக தங்கமகன் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanush's VIP 2 Now Changed Thanga Magan, Movie Title and First look Released Yesterday Evening. It should also be remembered that Thanga Magan is an yesteryear film of Superstar Rajinikanth, also the father-in-law of Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil