»   »  "தங்கமகன்" தனுஷ்... "யூ"... குடும்பத்துடன் பார்க்கலாம்!

"தங்கமகன்" தனுஷ்... "யூ"... குடும்பத்துடன் பார்க்கலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்க மகன் திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யூ சான்றிதழ் அளித்துள்ளனர்.

தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தங்கமகன். வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.வருகின்ற 18ம் தேதி இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய வகையில் யூ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.


வேலை இல்லாப் பட்டதாரி படத்தின் 2 வது பாகமாக உருவாகி இருக்கும் இப்படம் தந்தை - மகன் உறவை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.


Thanga Magan Gets U Certificate

2 மணி நேரம் ஓடக்கூடிய இப்படத்தில் தனுஷின் காதலியாக எமி ஜாக்சனும் மனைவியாக சமந்தாவும் நடித்திருக்கின்றனர். (இவர்கள் இருவரும் இதே போல விஜய்யுடன் இணைந்து தெறி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது)


இன்னும் 4 தினங்களில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்ததால் படக்குழுவினர் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.


English summary
Dhanush Wrote on Twitter #thangamagan censored with clean "U" .. December 18 release".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil