»   »  தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கமகன் டிரெய்லர் ரிலீஸ் !

தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கமகன் டிரெய்லர் ரிலீஸ் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கமகன் டிரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.


தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தங்கமகன். கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற வேலை இல்லாப் பட்டதாரி படத்தின் 2 வது பாகமாக தங்கமகன் உருவாகி இருக்கிறது.


Thanga Magan Trailer Release Today

இப்படத்தை வருகின்ற 18ம் தேதி படக்குழுவினர் வெளியிடுகின்றனர். மேலும் இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது.


மழை, வெள்ளம் காரணமாக நிறையப் படங்கள் தள்ளிப்போன நிலையில் சொன்ன தேதியில் தமிழ், தெலுங்கு மொழிகளில் படத்தை வெளியிடுகிறார் தனுஷ்.தெலுங்கில் இப்படம் 'நவ மன்மதடு' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு சுமார் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் இப்படத்தை 400 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகின்றனர்.


வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தங்கமகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தங்கமகனில் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் தனுஷும், ஆரண்யாவாக நடிகை சமந்தாவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Actor Dhanush Wrote on Twitter "Resuming work from Tom. #thangamagan trailer from Tom evening 6 pm".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil