»   »  தனுஷின் 'தங்கமகன்' டிரைலரில் இயக்குநர் வழுக்கிய இடத்தை கவனி்ச்சீங்களா?

தனுஷின் 'தங்கமகன்' டிரைலரில் இயக்குநர் வழுக்கிய இடத்தை கவனி்ச்சீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் நடித்த தங்கமகன் திரைப்படத்தின் டிரைலர் நேற்று இரவு ரிலீஸ் ஆனது. ஆனால், தமிழ் மொழியை தூக்கிப்பிடிக்கிறேன் என்ற பெயரில் இயக்குநர் ஆர்.வேல்ராஜ் தன்னையும் அறியாமல் டிரைலரில் தடுமாறியுள்ளார்.

தங்கமகன் திரைப்பட டிரைலர் நேற்று ரிலீசானது. மொத்தம், 2.53 ஓடக்கூடிய இந்த டிரைலரில் பெரும்பாலான காட்சிகளில் தனுஷின் காதல் மற்றும் ஆக்ஷனுடன் சேர்ந்த குடும்ப காட்சிகளே ஓடுகிறது.


Thangamagan official trailer has lack of logic

டிரைலரில், தனுஷ் கதாப்பாத்திரம், தமிழ் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்த படத்தின் எழுத்து, இயக்கத்தை கவனிக்கும் வேல்ராஜ், தமிழ் மொழியை முன்னிலைப்படுத்தி பஞ்ச்சுகளை ரெடி செய்துள்ளார்.


ஒரு காட்சியில் வில்லன் இப்படி சொல்கிறார், "நான் நினைச்சா உன்ன மொத்தமா அழிச்சிருவேன்.." அதற்கு ஹீரோ பதில். "தமிழ யாராலையும் அழிக்க முடியாது சார்".


இதேபோல டிரைலர் முடிவடையும் நேரத்தில், தனுஷ் ஒரு நீண்ட டயலாக்கை பேசுகிறார். "தமிழ்நாட்ல இங்கிலீஷ் தோற்கலாம், கொரியன் தோற்கலாம், இத்தாலியன் தோற்கலாம், ஸ்பாஷின் தோற்கலாம், ஜப்பானிஷ், சைனீஷ் தோற்கலாம், ஜெர்மன் தோற்கலாம், ஆனா தமிழ்நாட்டுல தமிழ் தோற்கவே முடியாதுடா" என்று அந்த டயலாக் முடிகிறது.


இதில் வேடிக்கை என்னவென்றால், ஆங்கிலம் உள்ளிட்ட அத்தனை மொழிகளையும் அடித்து நொறுக்கிவிட்டு தமிழை முன்னிலைப்படுத்தும் இந்த டயலாக் முடிவடையும்போது, தனுஷுக்கு பக்கத்தில், written & directed by R.Velraj என ஆங்கிலத்தில் பெயரை போட்டுள்ளார் இயக்குநர். இதுக்கு பேருதான் ஊருக்கு உபதேசமோ?

English summary
Thangamagan official trailer has lack of logic as it shows the directer name in the English, while the entire trailer has been praising Tamil language.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil