For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  துபாயில் சித்திரை திருவிழா: தங்கமீன்கள் சாதனா கௌரவிப்பு

  By Siva
  |

  துபாய்: துபாயில் டிடிஎஸ் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சித்திரைத் திருவிழா 25.04.2014 அன்று மாலை 6 மணிக்கு துபாய் இந்தியப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஷேக் ராஷித் அரங்கில் வெகு சிறப்புற நடைபெற்றது.

  சித்திரைத் திருவிழாவிற்கு டிடிஎஸ் ஈவென்ட்ஸ் தலைவர் ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். சித்திரைத் திருவிழா சீரோடும் சிறப்போடும் நடைபெற உதவி வரும் அனைத்து நல்லுங்களுக்கும் வாழ்த்துக்க்ளை தெரிவித்தார்.

  சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் துணைச் செயலாளராக உயர் பதவி வகித்து வரும் தமிழர் முனைவர் ராஜன் நடராஜன் பங்கேற்றார். அவர் தனது உரையில், சமீபத்தில் சர்வதேச வர்த்தகப் பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அமீரக வர்த்தகப் பிரமுகர்களும் பங்கேற்றனர். அவர்கள் தங்களது நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியர்களே முக்கியப் பங்கு வகித்து வருவதாக குறிப்பிட்டார்.

  தமிழ்நாடு

  தமிழ்நாடு

  இப்படி வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு நாம் வாழ்ந்து வரும் நாடுகளை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் நாம் ஏன் நமது தமிழ்நாட்டை நம்பர் ஒன்னாக கொண்டு வர முடியாது. இத்தகைய முயற்சியினை டிடிஎஸ் ஈவென்ட்ஸுடன் இணைந்து தமிழகத்தில் 2015 ஆம் ஆண்டு உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து செயல் திட்டம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் அமீரகத் தமிழர்கள் முக்கியப் பங்கு வகிப்பர் எனக் குறிப்பிட்டார்.

  தமிழர்கள்

  தமிழர்கள்

  ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும துணைத் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் அவர்கள் தனது உரையில், தன்னை அமீரகத் தமிழர்களின் முகவரி எனக் கூறினார். தமிழ் தான் நம் அனைவருக்கும் முகவரி எனக் குறிப்பிட்டார். பும்கா குரூப் மேலாண்மை இயக்குநர் சித்தார்த் பாலச்சந்திரன், சமூக சேவகர் கே. குமார், அமீரக வர்த்தகப் பிரமுகர் சைஃப் அல் ஜலால், சௌக்கத் அலி உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

  பரத்வாஜ்

  பரத்வாஜ்

  திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ் தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஞாபகம் வருதே, ஒவ்வொரு பூக்களுமே உள்ளிட்ட பாடல்களை நினைவு கூர்ந்து ரசிகர்களின் பாராட்டினைப் பெற்றார்.

  சாதனா

  சாதனா

  தங்க மீன்கள் படத்திற்காக தேசிய விருது பெற்ற செல்வி சாதனா நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். தன்னை கௌரவித்த அமீரகத் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். இந்த நினைவு தனது வாழ்நாள் உள்ளவரை நீங்காத நினைவுகளாக இருக்கும் என உணர்ச்சி மேலிட கூறினார். ஸ்டார் கல்வி நிறுவன மேலாளர் மர்யம் ஸலாஹுத்தீன் பூங்கொத்து வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

  சிங்கர்ஸ்

  சிங்கர்ஸ்

  சின்னத்திரை சூப்பர் சிங்கர்ஸ் கிருஷ்ணமூர்த்தி, ரவிசங்கர், யாழினி, நவீன், கோகுல், ஆசிஃப் மீரான் உள்ளிட்டோர் பாடல்கள் பாடினர். மெல்லிசை நிகழ்வினை சந்திரா கீதா கிருஷ்ணன் குழுவினர் வழங்குகினர். கவிதா பிரசன்னா குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

  மிமிக்ரி

  மிமிக்ரி

  சின்னத்திரை மிமிக்ரி புகழ் சேதுவின் மிமிக்ரியில் சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் நடைபெற்ற காமெடிகளை அரங்கு அதிரும் வண்ணம் பகிர்ந்து கொண்டார்.

  ஏற்பாடுகள்

  ஏற்பாடுகள்

  நிகழ்விற்கான அணுசரனையினை பும்கா குரூப், பிளாக் துளிப் பிளவர், ராயல் செஃப், சௌந்தர்யம் ஜெனரல் டிரேடிங், வேதாரண்யம் பாய்ண்ட் காலிமர் சர்வதேசப் பள்ளி, சூப்பர் டெக்ஸ், பேங்க் ஆஃப் பரோடா, வோஸ்டாக், அப்கிரேட் டயர் சேஞ்சிங், டிரான்ஸ்கான், ரமீ குரூப் ஆஃப் ஹோட்டல், வெஸ்டர்ன் ஆட்டோ, கிராஃபிக் எகுப்மெண்ட், பெர்செப்ட் பிரிண்ட், சன் குரூப், வாஃபி ஹோட்டல்ஸ், அல் வஹா, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கின. நிகழ்விற்கான ஏற்பாடுகளை டிடிஎஸ் ஈவென்ட்ஸின் முஹம்மது தாஹா, கீதா கிருஷ்ணன், சுந்தர், பாலா, விஜயேந்திரன், விஜயராகவன், பிரசன்னா உள்ளிட்ட குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.

  English summary
  Chithirai festival was celebrated in Dubai on april 25.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X