twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேரனை தாக்கிய தங்கர்தங்கர்பச்சான் எப்போதும் ஏதாவது ஒரு பரபரப்பில் தான் இருந்து கொண்டிருக்கிறார். கோவை ரத்தினம் கலைக் கல்லூரியின் விஷூவல் கம்யூனிகேசன்ஸ் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்ற வந்திருந்த தங்கர்பச்சான் நிருபர்களிடம் பேசுகையில், நல்ல படங்கள் எல்லாம் தியேட்டரில் ஓடுவதே இல்லை. எனது அழகி வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால், திருடா திருடி படம் ஈட்டிய வருமானத்தில் 40 சதவீதத்தைக் கூட அழகி சம்பாதிக்கவில்லை. மோசமான படமா, முதல் நாளே தியேட்டரில் கூட்டம் அலை மோதுகிறது. நல்ல படமாக இருந்தால் 15 நாட்கள் கழித்துத் தான் லேட் பிக்கப் ஆகிறது. அழகி படம் வென்றதற்குக்குக் காரணம் கூட தமிழகர்கள் காதலில் மயங்கிக் கிடப்பது தான். அதே நேரத்தில் எனது தென்றல் படம் தோற்றது. காரணம், தமிழர்களுக்கு தமிழ் உணர்வு இல்லாதது தான். ஆட்டோகிராப் கூட ஒரு மனிதன் 4 பெண்களை ஏமாற்றிய கதை தான். அதனால் தான் அது ஓடியது. தென்றல் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது. காவிரி, தமிழ் தேசியம், தலித் விடுதலை, தமிழ் வழி கோவில் வழிபாடு என விஷயங்களை வைத்தேன். ஆனால், தமிழ் உணர்வு தமிழகத்தில் மக்கிப் போயிவிட்டதால் படம் தோற்றுவிட்டது. தற்போது பெயர் தான் தமிழ்நாடு என்று உள்ளது. தமிழர்களுக்கான எந்த அடையாளமும் நம்மிடம் இல்லை. தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது ரஜினி, விஜயகாந்த் ஆகியோரின் பேச்சுக்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் தரக் கூடாது. தமிழ், தமிழ் என்று பேசும் நடிகர்கள் தங்களது பள்ளிச் சான்றிதழில் என்ன மொழியில் படித்தார்கள் என்பதை மக்களுக்குக் காட்ட வேண்டும் என்றார் தங்கர்பச்சான். பின்னர் மாணவர்களிடையே அவர் உரையாற்றியதாவது: தங்கர்பச்சான் என்ற பெயரைக் கேட்டதும் நான் மலையாளி என்று நினைக்கின்றனர். நான் தமிழ்தான். தங்கராசு என்பது என் பெயர், என் அப்பா பெயர் பச்சான். இரண்டையும் சேர்த்து தங்கர்பச்சான் ஆக்கிவிட்டேன். என் பெற்றோர் ஆனா, ஆவண்ணா கூடத் தெரியாத கைநாட்டுக்கள். நான் சினிமாவுக்கு வரும் முன் கேமராவைப் பார்த்தது கூட 2 முறை தான். ஐந்தாம் வகுப்பு படித்தபோது குரூப் போட்டோ எடுத்தார்கள். அப்போது கேமராவைப் பார்த்தேன். பின்னர் பியூசிக்கு பஸ் பாஸ் வாங்க பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கப் போன்போது பார்த்தேன். திரைப்படக் கல்லூரியில் சினிமாட்டோகிராபியில் சேர்ந்துவிட்டு, சரியாக படம் எடுக்கத் தெரியாமல் அவமானப்பட்டேன். அந்தத் தோல்வியால் துவளாமல் போராடியதால் தான் வென்றேன். அடிப்படையில் நான் ஒரு இலக்கியவாதி. என் எழுத்துக்களை பல்கலைக்கழகங்களில் எம்.ஏ படிப்பில் பாடங்களாக வைத்திருக்கிறார்கள். 40 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துவிட்டேன். ஆனால், நான் நினைத்த மாதிரி யாரும் படம் எடுக்கவில்லை என்பதால் தான் இயக்குனராக மாறினேன் என்றார். சேரனின் பாண்டவர் பூமியை தங்கர்பச்சான் கிண்டல் செய்ததையடுத்து குருவி கொடஞ்ச கொய்யா பழம் என்ற சமூக அறிவு பாட்டை வைத்த தங்கர்பச்சானே என்று தாக்கு தாக்கு என தாக்கினார் சேரன். இதையடுத்து இருவரும் ஒரு ரவுண்டு மோதிக் கொண்டனர். இப்போது அவரது ஆட்டோகிராப்பை தாக்கியுள்ளார் தங்கர். விரைவில் சேரனிடம் இருந்தும் பதில் வரலாம்.

    By Staff
    |

    தங்கர்பச்சான் எப்போதும் ஏதாவது ஒரு பரபரப்பில் தான் இருந்து கொண்டிருக்கிறார்.

    கோவை ரத்தினம் கலைக் கல்லூரியின் விஷூவல் கம்யூனிகேசன்ஸ் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்ற வந்திருந்த தங்கர்பச்சான் நிருபர்களிடம் பேசுகையில்,

    நல்ல படங்கள் எல்லாம் தியேட்டரில் ஓடுவதே இல்லை. எனது அழகி வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால், திருடா திருடி படம் ஈட்டிய வருமானத்தில் 40 சதவீதத்தைக் கூட அழகி சம்பாதிக்கவில்லை.

    மோசமான படமா, முதல் நாளே தியேட்டரில் கூட்டம் அலை மோதுகிறது. நல்ல படமாக இருந்தால் 15 நாட்கள் கழித்துத் தான் லேட் பிக்கப் ஆகிறது.

    அழகி படம் வென்றதற்குக்குக் காரணம் கூட தமிழகர்கள் காதலில் மயங்கிக் கிடப்பது தான். அதே நேரத்தில் எனது தென்றல் படம் தோற்றது. காரணம், தமிழர்களுக்கு தமிழ் உணர்வு இல்லாதது தான்.

    ஆட்டோகிராப் கூட ஒரு மனிதன் 4 பெண்களை ஏமாற்றிய கதை தான். அதனால் தான் அது ஓடியது. தென்றல் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது. காவிரி, தமிழ் தேசியம், தலித் விடுதலை, தமிழ் வழி கோவில் வழிபாடு என விஷயங்களை வைத்தேன்.

    ஆனால், தமிழ் உணர்வு தமிழகத்தில் மக்கிப் போயிவிட்டதால் படம் தோற்றுவிட்டது. தற்போது பெயர் தான் தமிழ்நாடு என்று உள்ளது. தமிழர்களுக்கான எந்த அடையாளமும் நம்மிடம் இல்லை.

    தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது ரஜினி, விஜயகாந்த் ஆகியோரின் பேச்சுக்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் தரக் கூடாது.

    தமிழ், தமிழ் என்று பேசும் நடிகர்கள் தங்களது பள்ளிச் சான்றிதழில் என்ன மொழியில் படித்தார்கள் என்பதை மக்களுக்குக் காட்ட வேண்டும் என்றார் தங்கர்பச்சான்.

    பின்னர் மாணவர்களிடையே அவர் உரையாற்றியதாவது:

    தங்கர்பச்சான் என்ற பெயரைக் கேட்டதும் நான் மலையாளி என்று நினைக்கின்றனர். நான் தமிழ்தான். தங்கராசு என்பது என் பெயர், என் அப்பா பெயர் பச்சான். இரண்டையும் சேர்த்து தங்கர்பச்சான் ஆக்கிவிட்டேன்.

    என் பெற்றோர் ஆனா, ஆவண்ணா கூடத் தெரியாத கைநாட்டுக்கள். நான் சினிமாவுக்கு வரும் முன் கேமராவைப் பார்த்தது கூட 2 முறை தான். ஐந்தாம் வகுப்பு படித்தபோது குரூப் போட்டோ எடுத்தார்கள். அப்போது கேமராவைப் பார்த்தேன். பின்னர் பியூசிக்கு பஸ் பாஸ் வாங்க பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கப் போன்போது பார்த்தேன்.

    திரைப்படக் கல்லூரியில் சினிமாட்டோகிராபியில் சேர்ந்துவிட்டு, சரியாக படம் எடுக்கத் தெரியாமல் அவமானப்பட்டேன். அந்தத் தோல்வியால் துவளாமல் போராடியதால் தான் வென்றேன்.

    அடிப்படையில் நான் ஒரு இலக்கியவாதி. என் எழுத்துக்களை பல்கலைக்கழகங்களில் எம்.ஏ படிப்பில் பாடங்களாக வைத்திருக்கிறார்கள்.

    40 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துவிட்டேன். ஆனால், நான் நினைத்த மாதிரி யாரும் படம் எடுக்கவில்லை என்பதால் தான் இயக்குனராக மாறினேன் என்றார்.

    சேரனின் பாண்டவர் பூமியை தங்கர்பச்சான் கிண்டல் செய்ததையடுத்து குருவி கொடஞ்ச கொய்யா பழம் என்ற சமூக அறிவு பாட்டை வைத்த தங்கர்பச்சானே என்று தாக்கு தாக்கு என தாக்கினார் சேரன்.

    இதையடுத்து இருவரும் ஒரு ரவுண்டு மோதிக் கொண்டனர். இப்போது அவரது ஆட்டோகிராப்பை தாக்கியுள்ளார் தங்கர். விரைவில் சேரனிடம் இருந்தும் பதில் வரலாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X