»   »  'நான் இருட்டுலேயே வாழ்றவன்..!' - தனி ஒருவன் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்

'நான் இருட்டுலேயே வாழ்றவன்..!' - தனி ஒருவன் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா ஆகியோர் நடித்த படம் 'தனி ஒருவன்'. இந்தப் படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வில்லனாகத் திரையில் வந்து மிரட்டினார் அரவிந்த்சாமி.

ஒரு ஹிட் படத்துக்காகக் காத்திருந்த ஜெயம் ரவிக்கு தன் அண்ணன் இயக்கத்திலேயே மீண்டும் திருப்பம் 'தனி ஒருவன்' ரூபத்தில் அமைந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து கோலிவுட்டில் ரவியின் பயணம் ஒரு படி மேலே சென்றது. அரவிந்த்சாமிக்கும் இந்தப் படம் நல்ல ரீ-என்ட்ரி விசிட்டிங் கார்டாக அமைந்தது.

தனி ஒருவன் :

தனி ஒருவன் :

ஒரு படம் ஹிட் ஆவதற்கு நல்ல கதையும், திரைக்கதையும் இருந்தால் போதும். பெரிய ப்ரோமோஷன்கள் தேவையில்லை, யார் விமர்சனமும் தேவையில்லை என நிரூபித்த படம் 'தனி ஒருவன்'. தனி ஒருவன் படத்தை மராத்தி, தெலுங்கு என போட்டி போட்டுக்கொண்டு ரீமேக் செய்தனர்.

ரீமேக் ராஜா :

ரீமேக் ராஜா :

அந்தப் படம் வெளியாகும் வரை 'ரீமேக் படங்களின் ராஜா' என்று தான் மோகன்ராஜாவை அழைத்து வந்தனர். ஜெயம் ராஜா தான் ஒரு சிறந்த இயக்குனர் என தனது ஸ்கிரிப்ட்டோடு நிரூபித்த 'தனி ஒருவன்' வெளிவந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகின்றன.

ஹீரோ - வில்லன் சக்சஸ்ஃபுல் காம்போ :

ஹீரோ - வில்லன் சக்சஸ்ஃபுல் காம்போ :

பெரும்பாலான படங்களில் ஹீரோவின் புத்திசாலித்தனத்திற்கு முன் தோற்றுப்போகிற வில்லன்களையே பார்த்துச் சலித்துப்போன தமிழ் சினிமாவுக்கு டெரா பைட் டெக்னாலஜி மூளையுடன் ஒரு வில்லன், ஸ்மார்ட் ஹீரோ என கலக்கல் காம்போ கொடுத்தது 'தனி ஒருவன்'. வில்லனும் அவனுக்குச் சற்றும் சளைக்காத ஹீரோவுமாக இருவரும் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் ரசிகர்களுக்கும் பிடித்துப்போனது.

கொண்டாடப்பட்ட வில்லன் :

கொண்டாடப்பட்ட வில்லன் :

க்ரைம் த்ரில்லர் வரிசையில் வந்த படங்களில் வில்லன் பேசும் வசனங்களையும் வில்லனையும் கொண்டாடுவதெல்லாம் அபூர்வம். அந்த வகையில் இந்தப் படத்தின் 'சித்தார்த் அபிமன்யு'வின் கேரக்டர் கச்சிதம். சித்தார்த் அபிமன்யுவின் வசனங்கள் தியேட்டரின் கைதட்டல் தாண்டி சமூக வலைதளங்களிலும் ஒலித்தது.

நீக்கப்பட்ட காட்சிகள் :

'தனி ஒருவன்' படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. 8.40 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ ஒரு ஃப்ளாஷ்-பேக் உட்பட மூன்று காட்சிகளைக் கொண்டிருக்கிறது.

English summary
Thani oruvan is an action thriller movie directed bu Jayam Raja. Jayam Ravi, Arvindswamy, Nayanthara are played lead roles in this movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil