»   »  பாக்ஸ் ஆபிஸ்: சைப் அலிகானை பின்னுக்குத்தள்ளி தனி ஒருவனாக சாதித்த ஜெயம் ரவி

பாக்ஸ் ஆபிஸ்: சைப் அலிகானை பின்னுக்குத்தள்ளி தனி ஒருவனாக சாதித்த ஜெயம் ரவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் வெள்ளியன்று வெளியான 4 படங்களில் ஜெயம் ரவியின் தனி ஒருவன் திரைப்படம் வசூலில் தனியாக நின்று வசூலைக் குவித்து வருகிறது.

கடந்த வாரம் வெளியான ஜெயம் ரவியின் தனி ஒருவன், விக்ராந்தின் தாக்க தாக்க, ஜீவனின் அதிபர் மற்றும் எப்போ சொல்லப் போற போன்ற 4 படங்களில் ஜெயம் ரவியின் தனி ஒருவன் திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.


விக்ராந்தின் தாக்க தாக்க ஓரளவு தாங்கினாலும் கூட வசூலில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ரசிகர்களின் வாய்மொழியாக கிடைத்த சான்றால் தனி ஒருவன் மற்ற படங்களை விட வசூல் சாதனை நிகழ்த்தி, பிறமொழிப் படங்களின் ஆதிக்கத்தை சென்னையில் கட்டுப்படுத்தி இருக்கிறது.


எந்தெந்தப் படங்கள் எவ்வளவு வசூல் செய்திருக்கின்றன என்று பார்க்கலாம்


தனி ஒருவன்

தனி ஒருவன்

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான தனி ஒருவன் திரைப்படம், வசூலில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. அது மட்டுமின்றி சைப் அலிகானின் பாண்டம் திரைப்படத்தை வசூலில் பின்னுக்குத்தள்ளி சாதனை புரிந்திருக்கிறது படம்.


தனி ஒருவன் - வசூல் மன்னன்

தனி ஒருவன் - வசூல் மன்னன்

தனி ஒருவன் படத்தின் மூலம் வசூல் மன்னனாக மாறியிருக்கிறார் ஜெயம் ரவி, ஜெயம் ரவியின் படங்களில் மிகப்பெரிய ஓபனிங் தனி ஒருவன் படத்திற்கு கிடைத்திருக்கிறது. படம் இதுவரை 240 காட்சிகள் திரையிடப்பட்டு 1.28 கோடிகளை வசூலித்து இருக்கிறது.


ரோமியோ ஜூலியட் - சகலகலாவல்லவன்

ரோமியோ ஜூலியட் - சகலகலாவல்லவன்

ஜெயம் ரவியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரோமியோ ஜூலியட் 72.76 லட்சங்களையும், சகலகலாவல்லவன் 57.85 லட்சங்களையும் முதல் வார இறுதியில் வசூலித்து இருந்தது. ஆனால் இந்த 2 படங்களையும் விட 2 மடங்கு அதிகம் வசூல் செய்து சாதனை நிகழ்த்தியிருக்கிறது தனி ஒருவன் திரைப்படம். வாய்மொழியாகப் பரவிய வார்த்தைகளே இந்த வசூலுக்கு காரணம் என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.


சைப் அலிகானை சரித்த சென்னை

சைப் அலிகானை சரித்த சென்னை

சைப் அலிகானின் சமீபத்திய வரவான பாண்டம் திரைப்படம் தனி ஒருவன் முன் தாக்குப்பிடிக்க முடியாமல் வசூலில் பின்தங்கிஇருக்கிறது. சென்னையில் பாலிவுட் படங்களுக்கு எப்போதும் கிடைக்கும் வரவேற்பு இந்தமுறை சைப்பின் படத்திற்கு கிடைக்காததால் 66 காட்சிகள் திரையிடப்பட்டு வெறும் 20 லட்சங்களை மட்டுமே வசூலித்து இருக்கிறது படம்.


வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க

சென்னையைப் பொறுத்தவரை வசூலில் 3 வது இடத்தில் இருக்கிறது ஆர்யாவின் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க திரைப்படம். கடந்த வாரம் 78 காட்சிகள் திரையிடப்பட்டு 13.98 லட்சங்களை சென்னையில் வசூலித்து இருக்கிறது படம். மொத்தமாக சென்னையில் மட்டும் இதுவரை 3 வாரங்களின் முடிவில் 2.55 கோடிகளை வசூலித்து இருக்கிறது படம்.


அசராத பாகுபலி

அசராத பாகுபலி

படம் வெளிவந்து 50 நாட்கள் தாண்டி விட்டன ஆனாலும் இன்னும் புதிய படங்களுக்குப் போட்டியாக களத்தில் நிற்கிறது பாகுபலி. கடந்த வாரம் மிகக்குறைந்த திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்ட இந்தப்படம் 10.69 லட்சங்களை வசூலித்து இருக்கிறது. சென்னையில் மட்டும் இதுவரை 8 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது படம். இது எந்தத் தமிழ்ப்படமும் நிகழ்த்தாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.


களத்தில் பின்தங்கிய சிம்பு

களத்தில் பின்தங்கிய சிம்பு

சிம்புவின் வாலு திரைப்படம் வசூலில் சற்று பின்தங்கி இருக்கிறது, கடந்த (3வது வாரம்) வாரத்தில் 8.31 லட்சங்களை வசூலித்து இருக்கும் வாலு சென்னையில் இதுவரை சுமார் 2.49 கோடிகளை வசூலித்து இருக்கிறது.


தாக்க தாக்க

தாக்க தாக்க

விக்ராந்தின் தாக்க தாக்க திரைப்படம் சுமார் 8.80லட்சங்களை வசூலித்து சென்னை பாக்ஸ் ஆபிசில் கடைசி இடத்தில் இருக்கிறது.


ஆக மொத்தம் இந்த வருடம் ஜெயம் ரவிக்கு ஜெயமான வருடம் தான் போல...English summary
Chennai Box Office: Thani Oruvan Movie has earned Rs 1.28 crore from 240 shows in its first weekend in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil