»   »  அஸ்வினையும் "தனி ஒருவன்" சுழற்றிப் போட்டு விட்டதே!

அஸ்வினையும் "தனி ஒருவன்" சுழற்றிப் போட்டு விட்டதே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரைப்படமொன்றை நான் பார்த்தேன் " என்று தனி ஒருவன் படத்தைப் பாராட்டியிருக்கிறார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

ஜெயம் ரவி நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் தரணியெங்கும் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.


Thani oruvan stands tall under the shadow of Aravind swamy - Says Ravichandran Ashwin

நல்ல ஒரு ஆக்க்ஷன் த்ரில்லராக வெளிவந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து இருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு பிரபலங்களும் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று இந்தப் படத்தைப் பார்த்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரைப்படமொன்றை நான் என் வாழ்க்கையில் பார்த்தேன்.தனி ஒருவன் படத்தின் உயரமே தனியாக உள்ளது, படத்தில் நடித்த அரவிந்த் சாமியின் நிழலைப் போல படத்தின் உயரம் என்னைப் பிரமிக்க வைத்தது என்று மனந்திறந்து பாராட்டியிருக்கிறார்.


சமீபத்தில் இயக்குநர் கவுதம் மேனன், நடிகர் சூர்யா ஆகியோரும் தனி ஒருவன் படத்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.


தனி ஒருவனின் நடிப்பிற்கு இந்த தரணியே ரசிகனப்பா...


English summary
Saw one of the finest tamil Movies, I have ever watched. Thani oruvan stands tall,under the shadow of Aravind swamy Says Ashwin Ravichandran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil