»   »  தனி ஒருவனாக சாதித்து விட்டார் ஜெயம் ரவி- ட்விட்டரில் வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

தனி ஒருவனாக சாதித்து விட்டார் ஜெயம் ரவி- ட்விட்டரில் வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் ராஜா - ஜெயம் ரவி வெற்றிக் கூட்டணியில் இன்று வெளிவந்திருக்கும் தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவும் , நாயகனுக்கு டப் கொடுக்கும் வில்லனாக அரவிந்த்சாமியும் தனி ஒருவனில் நடித்திருக்கின்றனர். படம் ஆக்க்ஷன் + த்ரில்லர் கலந்த கலவையாக வெளிவந்து தங்களின் உள்ளத்தைக் கவர்ந்து இருப்பதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.


ஆர்யாவின் யட்சன் மற்றும் விஷாலின் பாயும் புலி ஆகிய 2 படங்களின் டிரெய்லருடன் ஆரம்பிக்கும் தனி ஒருவன் ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸாக இருப்பதாகவும் படத்திற்குத் தகுந்தார் போல இசையைக் கொடுத்து ஆதி மிரட்டி இருக்கிறார் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளனர்.


ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி 3 பேரும் போட்டி போட்டு தனி ஒருவனில் நடித்திருக்கின்றனர், இவர்களின் அலட்டிக் கொள்ளாத நடிப்பிற்காகவே படத்தைப் பார்க்கலாம். நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படமாக தனி ஒருவன் மாறியிருக்கிறது இது படத்தை முழுவதும் பார்த்தவர்களின் பாராட்டு.


எல்லோரும் கொண்டாடும் தனி ஒருவனில் எந்தெந்த காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன என்பதை அவர்களின் பதிவுகளில் இருந்து நாம் பார்க்கலாம்.


காதல் கிரிக்கெட்டு சூப்பர்

தனி ஒருவனில் வரும் காதல் கிரிக்கெட்டு சாங் சூப்பர் பாஸ், இந்தப் பாடலை கொடுத்ததற்காக இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா மற்றும் தனி ஒருவன் படக்குழுவினருக்கு நன்றிகள் என்று கூறியிருக்கிறார் உதவாக்கரை ராஜு.


வேலாயுதம் - தனி ஒருவன்

விஜயின் நடிப்பில் ராஜா இயக்கி வெளியான வேலாயுதம் படத்தின் தொடர்ச்சியே தனி ஒருவன் திரைப்படம், வேலாயுதம் கோபத்தை தனி ஒருவனில் பிரதிபலித்திருக்கிறார் ஜெயம் ரவி உதய் என்னும் ரசிகரின் பதிவிது.


கடவுளாலே முடியாது

நல்லதை மட்டுமே பண்றதுக்கு கடவுளாலேயே முடியாது நாமெல்லாம் எம்மாத்திரம் வசனம் மாஸ் என்று பாராட்டியிருக்கிறார் சரவணன்.


அசால்ட் அரவிந்த்

தனி ஒருவனில் அரவிந்த் சாமியின் நடிப்பு பிரமாதம், தமிழ் சினிமா இதுவரை அரவிந்த் சாமியை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அரவிந்த் சாமியின் நடிப்பை புகழ்ந்திருக்கிறார் சரவணன்.


தனி ஒருவன் சாதனை

தனி ஒருவன் நினைத்து விட்டால் சாதிப்பான் ஜெயம் ரவி சாதித்து விட்டார் என்று படத்தின் தலைப்பு மூலமாகவே ஜெயம் ரவியைப் பாராட்டியிருக்கிறார் நவீன்.


முதல் பாதி

தனி ஒருவன் முதல் பாதி தெறி மாஸ் என்று உற்சாகத்துடன் ட்வீட்டியிருக்கிறார் ஆரோன்.


காமெடி என்ற பெயரில் எதுவும் இல்லை

மிகப்பெரிய விஷயம் தனி ஒருவனில் காமெடியன் என்று யாரும் இல்லை, இதனால் திரைக்கதையில் எந்தத் தொய்வும் இல்லாமல் ஒரு கூர்மையான கத்தியைப் போன்று திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் அபிஷேக்.


English summary
Thani Oruvan Movie - Live Audience Response.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil