»   »  'இந்த' படம் ஓடாவிட்டால் நடிப்புக்கே முழுக்கு போடவிருந்த சூப்பர் ஸ்டார்

'இந்த' படம் ஓடாவிட்டால் நடிப்புக்கே முழுக்கு போடவிருந்த சூப்பர் ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: புலிமுருகன் படம் ஓடாவிட்டால் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருந்தாராம் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.

வைஷாக் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியான புலிமுருகன் படம் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது. ரூ. 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் கடந்த 21ம் தேதி வெளியானது.

படம் இதுவரை ரூ.60 கோடி வசூல் செய்துள்ளது. நிச்சயம் ரூ.100 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புலிமுருகன்

புலிமுருகன்

புலிமுருகன் படம் பிளாப் ஆனால் படங்கள் இயக்குவதை நிறுத்த முடிவு செய்ததாக இயக்குனர் வைஷாக் தெரிவித்துள்ளார். வைஷாக் இந்த முடிவை மோகன்லாலிடமும் கூறியுள்ளார்.

மோகன்லால்

மோகன்லால்

வைஷாகின் முடிவை கேட்ட மோகன்லால் கூறியதாவது, புலிமுருகன் நிச்சயம் ஹிட்டாகும். இல்லை என்றால் நான் இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் என்றார்.

வேண்டாம்

வேண்டாம்

மோகன்லாலின் முடிவை கேட்ட இயக்குனர் பேரதிர்ச்சி அடைந்தார். வேண்டாம் சார் அப்படி எல்லாம் பேசாதீர்கள், உங்களின் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார்.

காரணம் இருக்கு

காரணம் இருக்கு

இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ளேன். அப்படி இருந்தும் புலிமுருகன் பற்றிய என் கணிப்பு பொய்யாகிவிட்டால் நான் நடிக்க தகுதியற்றவன் என்று மோகன்லால் தெரிவித்துள்ளார். மோகன்லாலின் கணிப்பு வீண் போகவில்லை. புலிமுருகன் மோகன்லாலின் சினிமா வாழ்க்கையிலேயே பெரிய ஹிட் படமாகியுள்ளது.

English summary
Pulimurugan, the recently released action thriller has emerged as the biggest hit of Mohanlal's career. Shockingly, Mohanlal had decided to quit acting, if the movie fails at the box office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil