Don't Miss!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- News
திருப்பத்தூர் அருகே இலவச வேஷ்டி சேலைக்கான டோக்கன் வினியோகம்..நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சோகம்
- Lifestyle
உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமா? அப்ப இத தினமும் நைட் டைம்-ல குடிங்க போதும்..!
- Technology
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
”நம்புனதுக்கு நன்றி”: பொம்மி என்ன சொன்னாங்க தெரியுமா? இதுல ஐஸ்வர்யா ராஜேஷும் இருக்காங்களா?
சென்னை: பிறந்தநாள் பரிசாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததை நினைத்து சூர்யா மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்..
Recommended Video
தேசிய விருது, பிறந்த நாள் இரட்டை மகிழ்ச்சியில் இருக்கும் சூர்யாவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தபடி உள்ளனர்.
சூர்யாவின் தேசிய விருது குறித்து நடிகைகள் அபர்ணா பாலமுரளியும் ஐஸ்வர்யா ராஜேஷும் ட்வீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது.
68-வது தேசிய விருது பட்டியலில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் 5 விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது. சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளியும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் சிறந்த பின்னணி இசைக்காகவும், இயக்குநர் சுதா சிறந்த திரைக்கதைக்காகவும் தேசிய விருது பெறுகின்றனர். அதேபோல் சிறந்த படமாக 'சூரரைப் போற்று' தேர்வாகியுள்ளது.
ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஓடிடி, திரையரங்க ரிலீஸ் படங்கள்.. ரசிகர்கள் உற்சாகம்!

5 விருதுகளை வென்று சாதனை
68-வது தேசிய விருது பட்டியலில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் 5 விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது. சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் சிறந்த பின்னணி இசைக்காகவும், இயக்குநர் சுதா சிறந்த திரைக்கதைக்காகவும் தேசிய விருது பெறுகின்றனர். அதேபோல் சிறந்த படமாக 'சூரரைப் போற்று' தேர்வாகியுள்ளது.

சூர்யாவுக்கு வாழ்த்து மழை!
'சூரரைப் போற்று' திரைப்படம் 5 விருதுகளை வென்ற நிலையில், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சூர்யாவிற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 5 தேசிய விருதுகள், பிரபலங்களின் வாழ்த்து மழை என 'சூரரைப் போற்று' டீம் பட்டாசாய் வெடித்து தங்களது தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

அபர்ணா பாலமுரளி ட்வீட்
சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப் போற்று' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மி என்ற பாத்திரத்தில் அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். துணிச்சலான பெண்ணாக நடித்திருந்த அபர்ணாவின் பொம்மி பாத்திரம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், "பொம்மி பாத்திரத்தில் தன்னை நடிக்க வைத்ததற்கும், தான் சிறப்பாக நடிப்பேன் என நம்பியதற்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல், சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் கூறி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் தேசிய விருது வென்றவர்களை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார். 5 விருதுகளை வென்ற சூரரைப் போற்று குழுவினருக்கும், மண்டேலா படக்குழுவுக்கும் வாழ்த்துக் கூறியுள்ளார். அதேபோல், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ள லக்ஷ்மிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.