»   »  பப்ளிசிட்டிக்கு நன்றி, கலக்குங்க கைவிட்டுடாதீங்க: ஹெச். ராஜாவை கலாய்த்த உதயநிதி பட இயக்குனர்

பப்ளிசிட்டிக்கு நன்றி, கலக்குங்க கைவிட்டுடாதீங்க: ஹெச். ராஜாவை கலாய்த்த உதயநிதி பட இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பப்ளிசிட்டிக்கு நன்றி சார் என்று இப்படை வெல்லும் படத்தின் இயக்குனர் ஹெச். ராஜாவிடம் தெரிவித்துள்ளார்.

மெர்சல் படத்திற்கு தயாரிப்பாளர்களுக்கு ஒரு பைசா செலவு வைக்காமல் பாஜக இலவச விளம்பரம் கொடுத்தது. பாஜக செய்த பிரச்சனையால் மெர்சலுக்கு தேசிய அளவில் சூப்பராக விளம்பரம் கிடைத்தது.

தேசிய ஊடகங்கள் மெர்சல் பற்றி செய்தி வெளியிட்டு பப்ளிசிட்டி கொடுத்தன.

விளம்பரம்

விளம்பரம்

மெர்சலை போன்றே தனது இப்படை வெல்லும் படத்திற்கும் ஹெச். ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் விளம்பரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ட்வீட்

உதயநிதி கலாய்த்ததை பார்த்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம் என்று ட்வீட்டினார்.

நன்றி

ராஜாவின் ட்வீட்டை பார்த்த இப்படை வெல்லும் படத்தின் இயக்குனர் கவுரவ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ராஜா சார் பப்ளிசிட்டிக்கு நன்றி சார். எங்களின் குழு உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கு. கலக்குங்க சார், கைவிட்டுடாதீங்க என்றார்.

ப்ரோ

செம்ம ப்ரோ 😂👌@gauravnarayanan என ரசிகர் ஒருவர் கவுரவின் ட்வீட்டை பார்த்து கமெண்ட் போட்டுள்ளார்.

English summary
Ippadai Vellum director Gaurav Narayanan tweeted that, '#ippadaivellum HRajaBJP 🙏🙏🙏 sir for the publicity . Enga full team ungaluku nandri Kadan patturuku.Kalakunga sir , kaivituraatheenga.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil