twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ. 200 கோடி வசூலை நெருங்கும் மெர்சல்: காரணம்... அந்த புண்ணியவான்கள் தான்

    By Siva
    |

    சென்னை: சுமாரான ஹிட்டாக வேண்டிய மெர்சல் படத்தை தேவையில்லாமல் பிரச்சனை செய்து ரூ. 200 கோடி வசூலை நோக்கி செல்ல வைத்துள்ளது பாஜக.

    அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு படக்குழுவினர் செய்த விளம்பரத்தை விட பாஜக தான் அமோகமாக விளம்பரம் செய்து கொடுத்துள்ளது.

    ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவற்றை நீக்க வேண்டும் என்று அடம்பிடித்தது.

    பாஜக

    பாஜக

    பாஜக செய்த பிரச்சனைகளால் மெர்சல் படத்தை பார்க்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. விளைவு படம ரிலீஸான 6 நாட்களில் ரூ. 155 கோடி வசூலித்துள்ளது.

    நன்றி

    நன்றி

    பாஜக மாநில தலைவர் தமிழிசையாவது சும்மா கண்டனம் தெரிவித்தார். ஆனால் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவோ விஜய்யின் மதத்தை இழுத்து பெரிய அளவில் விளம்பரம் செய்துவிட்டார்.

    விமர்சனம்

    விமர்சனம்

    மெர்சல் படம் ரிலீஸான அன்று அது பல படங்களின் கலவையாக உள்ளது. படம் சுமாராக ஓடும் என்று விமர்சனங்கள் வந்ததால் தயாரிப்பாளர்கள் கவலை அடைந்தனர். அந்த நேரம் தான் பாஜக கண்டனம் என்ற பெயரால் விளம்பரம் செய்து வசூலை சூடுபிடிக்க வைத்தது.

    கோவில்

    கோவில்

    கிறிஸ்தவரான ஜோசப் விஜய் படத்தில் கோவில்களுக்கு பதில் மருத்துவமனை கட்ட வேண்டும் என்று பேசியதற்கு பதில் தேவாலயங்களுக்கு பதில் மருத்துவமனை என்று கூறியிருக்கலாம் என ராஜா தெரிவித்தார். இதையடுத்து அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து ராஜாவை கழுவிக் கழுவி ஊத்தினர், விஜய்யை ஆதரித்தனர்.

    சூப்பர் ஹிட்

    சூப்பர் ஹிட்

    பாஜக செய்த பிரச்சனையால் மெர்சல் படம் விரைவில் ரூ.200 கோடி வசூலை தொட உள்ளது. தமிழகத்தில் மெர்சலுக்கு பெரும் எதிர்ப்பாமே என்று கூறி வெளிநாடுகளிலும் அந்த படத்தை பார்க்க தமிழர்கள் படையெடுக்கிறார்கள்.

    பிரபலம்

    பிரபலம்

    பாஜக பிரச்சனை செய்ய செய்ய விஜய் தேசிய அளவில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அவர் சினிமா வாழ்க்கையில் மெர்சல் தான் பெரிய ஹிட் என்றாகிவிட்டது.

    English summary
    Thanks to BJP, Vijay starrer Mersal is set to join Rs. 200 crore club soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X