»   »  'தேவி' கொடுத்த உற்சாகம்: கமுக்கமாக அதுவும் தீயாக வேலை பார்த்த விஜய்

'தேவி' கொடுத்த உற்சாகம்: கமுக்கமாக அதுவும் தீயாக வேலை பார்த்த விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் ஏ. எல். விஜய் ஜெயம் ரவியுடன் சேர்ந்துள்ள படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

இயக்குனர் ஏ.எல். விஜய் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோரை வைத்து தேவி படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிட்டார்.

தேவி படத்திற்காக தூக்கத்தை தொலைத்து வேலை செய்ததாக கூறியிருந்தார்.

தேவி

தேவி

தேவி படம் மூன்று மொழிகளிலுமே ஹிட்டாகியுள்ள சந்தோஷத்தில் இருக்கும் விஜய் தனது அடுத்த பட வேலையை துவங்கி தீயாக வேலை பார்த்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

தனது அடுத்த படம் ஜெயம் ரவியுடன் என விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திரு்தார். இந்நிலையில் தேவி வேலையை முடித்த கையோடு ரவியின் படத்தை துவங்கி முதல்கட்ட படப்பிடிப்பையே நடத்தி முடித்துவிட்டாராம் விஜய்.

விஜய்

விஜய்

அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 20ம் தேதி துவங்க உள்ளதாம். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து 3 வாரங்கள் நடக்கிறதாம். அதன் பிறகு படக்குழு கேரளா, அந்தமான், பாங்காக் செல்கிறது. ஜனவரியில் படப்பிடிப்பை முடித்து ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் விஜய்.

உற்சாகம்

உற்சாகம்

ஒரு ஹிட் கிடைக்காதா என்று விஜய் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் தேவி ஹிட்டாகியுள்ளது. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்ட நேரத்தில் படத்தை இயக்கி வெற்றி பெற்றுள்ளார் விஜய்.

English summary
Director AL Vijay has started his next project with Jayam Ravi and that too he completed the first schedule of the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil