»   »  பாகுபலி 2 படத்தை பின்னுக்குத்தள்ளி தங்கல் படைத்த புதிய சாதனை: காரணம் சீனர்கள்

பாகுபலி 2 படத்தை பின்னுக்குத்தள்ளி தங்கல் படைத்த புதிய சாதனை: காரணம் சீனர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஆங்கிலம் அல்லாத படங்களில் 5வது இடத்தை பிடித்துள்ளது தங்கல்.

ஆமீர் கான், பாத்திமா சனா ஷேக், சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்த தங்கல் படம் சீனாவில் கடந்த மாதம் ரிலீஸானது. சீன மக்கள் தங்கல் படம் ஓடும் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.


Thanks to people of China: Dangal sets a new record

சீனர்களின் அமோக ஆதரவால் தங்கல் பாகுபலி 2 பட வசூலை முந்தியுள்ளது. உலக அளவில் தங்கல் தற்போது வரை ரூ. 1, 930 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் நிச்சயம் ரூ. 2000 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சீனா வசூலால் உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஆங்கிலம் அல்லாத பட வரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ளது தங்கல். இதுவரை உலக அளவில் 300 மில்லியன் டாலருக்கு(ரூ.1928 கோடி) மேல் வசூல் செய்த ஆங்கிலம் அல்லாத படங்கள்,


சீனாவின் தி மெர்மெய்ட்(533 மில்லியன் டாலர்), மான்ஸ்டர் ஹன்ட்(386 மில்லியன் டாலர்), பிரான்ஸின் தி இன்டச்சபிள்ஸ்(427 மில்லியன் டாலர்) மற்றும் ஜப்பானின் யுவர் நேம்(354 மில்லியன் டாலர்).

English summary
Aamir Khan's Dangal has become the fifth non-English movie to have collected more than Rs. 1928 crores world wide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil