»   »  செக் பவுன்ஸ்: முத்துக்குமார் குடும்பம் தயாரிப்பாளர்கள் பட்டியலை கொடுத்தால் பணத்தை வாங்கித் தருகிறேன்

செக் பவுன்ஸ்: முத்துக்குமார் குடும்பம் தயாரிப்பாளர்கள் பட்டியலை கொடுத்தால் பணத்தை வாங்கித் தருகிறேன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நா. முத்துக்குமாருக்கு எந்தெந்த தயாரிப்பாளர்கள் அளித்த காசோலைகள் பவுன்ஸாகி வந்தன என்ற பட்டியலை அவரது குடும்பத்தார் அளித்தால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தான் வாங்கித் தருவதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.

பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமார் மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 14ம் தேதி ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரை 15 நிமிடங்கள் முன்கூட்டியே அழைத்து வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதாக அவரின் நெருங்கிய நண்பரான இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.

முத்துக்குமாரின் திடீர் மறைவால் அவரது நண்பர்களும், ரசிகர்களும் சோக யாழை மீட்டுகிறார்கள்.

பணம்

பணம்

முத்துக்குமாரின் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர் பாடல் எழுதியதற்கு தயாரிப்பாளர்கள் பலர் காசோலைகளை அளித்ததாகவும் அந்த காசோலைகளில் பல வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் பவுன்ஸாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ரூ.70 லட்சம்

ரூ.70 லட்சம்

முத்துக்குமாருக்கு அளிக்கப்பட்டு பவுன்ஸாகி வந்த காசோலைகளின் மதிப்பு ரூ.70 லட்சம் என்று கூறப்படுகிறது. அந்த பணம் அவரது குடும்பத்தாருக்கு கிடைத்தால் பேருதவியாக இருக்கும்.

தாணு

தாணு

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், நா. முத்துக்குமாருக்கு எந்தெந்த தயாரிப்பாளர்கள் அளித்த காசோலைகள் பவுன்ஸாகி வந்தன என்ற பட்டியலை அவரது குடும்பத்தார் அளித்தால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தான் வாங்கித் தருவதாக தாணு தெரிவித்துள்ளார்.

உழைப்பு

உழைப்பு

தாணு கூறியபடி அவர் முத்துக்குமாருக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கிக் கொடுத்தால் 9 வயது மகன், 8 மாத கைக்குழந்தையை வைத்துக் கொண்டு கண்ணீரோடு நிற்கும் முத்துக்குமாரின் மனைவிக்கு அது பேருதவியாக இருக்கும்.

முத்துக்குமார்

முத்துக்குமார்

எங்கள் அண்ணன் எளிய வாழ்க்கை வாழத் தேவையானவற்றை விட்டுச் சென்றுள்ளார், அதீத அன்பினால் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகரங்கள் நீள்வது எங்களை மேலும் சங்கடப்படுத்தவே செய்கிறது என்று முத்துக்குமாரின் தம்பி ரமேஷ் குமார் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

English summary
Producer Thanu said that if there were cheque bounce incidents and if lyricist Na. Muthukumar's family gives the list of producers who have defaulted then he would make sure that the payment reaches the family.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil