»   »  கபாலி ரிலீஸ்... பைரசியைத் தடுக்க கலைப்புலி தாணு கோர்ட்டில் மனு

கபாலி ரிலீஸ்... பைரசியைத் தடுக்க கலைப்புலி தாணு கோர்ட்டில் மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையதளங்களில் கபாலி படத்தின் முறைகேடான பதிவேற்றத்தை தடுக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பட தயாரிப்பாளரான கலைப்புலி தாணு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. அட்டக்கத்தி, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய ரஞ்சித் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் பாடல்கள் வரை அனைத்தும் ஹிட்டடித்துள்ளன.

இப்படத்தில் ராதிகா ஆப்தே, அட்டகத்தி தினேஷ், கலையரசன், கிஷோர், நடிகை தன்ஷிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்துள்ளார்.

ரிலீஸ்...

ரிலீஸ்...

அடுத்தவாரம் இப்படம் உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

மனு...

மனு...

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், இணையத்தளங்களில் கபாலி படத்தின் முறைகேடான பதிவேற்றத்தைத் தடுக்கவேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார்.

பைரசி...

பைரசி...

சமீபகாலமாக படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன அன்றே நல்ல தெளிவான காட்சிகளுடன் முழுப்படமும் இணையத்தில் வெளியாவது அதிகரித்து வருகிறது. எனவே, அதை மனதில் வைத்தே முன்னெச்சரிக்கையாக தாணு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தடை தேவை...

தடை தேவை...

மேலும், உலகம் முழுவதும் உள்ள இது போன்ற 180க்கும் மேற்பட்ட பைரசி இணையதளங்களையும் தடை செய்ய வேண்டும் எனவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
As a precautionary measure, Kabali producer Kalaipuli S Thanu has filed a petition in Chennai High Court to block 180+ piracy websites across the globe, which are constantly spreading pirated version of Tamil films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil