»   »  வேதாளம் தரலோக்கல் பாடல் டீசர் விரைவில்

வேதாளம் தரலோக்கல் பாடல் டீசர் விரைவில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் படத்தின் பாடல்கள் வரும் 16ம் தேதியன்று வெளியாகிறது.இந்நிலையில் அதற்கு முன்னதாக படத்தில் இடம்பெறும் தர லோக்கலான பாடலின் டீசர் ஒன்றை படக்குழுவினர் வெளியிடவிருக்கின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்,ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின் மற்றும் சூரி ஆகியோர் நடித்திருக்கும் படம் வேதாளம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Thara Local Teaser from Vedhalam

வேதாளத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இப்படத்தின் டீசர், இணையத்தில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து மேலும் ஒரு டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, தர லோக்கலான ஒரு பாடல் டீசரை விரைவில் வெளியிடவுள்ளார்கள்.

இந்தத் தகவலை படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். அநேகமாக நாளை வியாழக்கிழமை என்பதால் இன்று நள்ளிரவில் பாடல் டீசர் வெளியாக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன

இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாளான அக்டோபர் 16-ந் தேதி வேதாளம் படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். தீபாவளி வெளியீடாக வேதாளம் திரைக்கு வருகிறது.

English summary
Vedhalam Editor Anthony Ruben Confirms Thara Local song Audio Teaser Release's, He took Twitter and wrote "After the #therikkavidalama teaser,a #Tharalocal audio teaser is on d way!Stay tuned folks! #Vedalam".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil