»   »  தனுஷ்- அனிருத் போட்ட ‘தரை டிக்கெட்’ ஆட்டம்

தனுஷ்- அனிருத் போட்ட ‘தரை டிக்கெட்’ ஆட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுசும் அனிருத்தும் இணைந்து தரை டிக்கெட்டுக்காக தூத்துக்குடியில் கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.

தனுஷ் அனிருத் கூட்டணி என்றாலே பாடல்கள் பட்டையை கிளப்பும். ஒய் திஸ் கொலைவெறி தொடங்கி வாட் எ கருவாட் வரை பல பாடல்களை ரசிகர்களால் பாராட்டப் பெற்றுள்ளன. இப்போது மாரி படத்திற்காக தரை டிக்கெட் ரேஞ்சுக்கு இறங்கி அடித்துள்ளார்களாம்.

அனேகன் வெற்றி

அனேகன் வெற்றி

அனேகன் படத்தில் டங்கா மாரி பாடல் அதிரி புதிரி ஹிட் அடித்தது வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் மாரி படத்தில் நடிக்கிறார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

பாலாஜி மோகன் இயக்கிவரும் ‘மாரி' படத்தில் முதன் முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் காஜல் அகர்வால்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கும் பணியை கவனித்து வருகிறார்.

தூத்துக்குடியில் ஓபனிங்

தூத்துக்குடியில் ஓபனிங்

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் படத்திற்கான ஓபனிங் பாடல் கடந்த ஒருவார காலமாக தூத்துக்குடியில் படமாக்கப்பட்டு வருகிறது.

தரை டிக்கெட்

தரை டிக்கெட்

அனேகன் படத்தில் இடம்பெற்ற டங்கமாரி பாடல் போன்று இதிலும் ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. தரை டிக்கெட்டை தனுஷ் எழுத, அனிருத் இசையமைத்துள்ளார்.

கெட்ட ஆட்டம்

கெட்ட ஆட்டம்

தூத்துக்குடி துறைமுகம் அருகே படமாக்கப்பட்டு வரும் இப்பாடலில் தனுஷூடன், இசையமைப்பாளர் அனிருத்தும் செம ஆட்டம் போட்டிருக்கிறார்.

கூடிய கூட்டம்

கூடிய கூட்டம்

மாரி படம் ஷூட்டிங் இங்கு நடைபெறுவதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானபேர் கூடிவிட்டனர். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் கூடி விட போலீசாரின் துணையோடு பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்போடு

போலீஸ் பாதுகாப்போடு

தனுஷின் மாரியால், தூத்துக்குடி துறைமுகமே அதகளமாகிவிட்டதாம். இப்படத்தில் பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ் வித்தியாசமான போலீஸ் வேடத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanush and Anirudh are back to writing sessions in their terrace. The duo had uploaded a video shot in a terrace during the music composition of 'Boomi Enna Suthudhe' in Ethir Neechal. The two of them have got back together for Maari this time round.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil