»   »  பாலா - சசிகுமாரின் தாரை தப்பட்டைக்கு 'ஏ'

பாலா - சசிகுமாரின் தாரை தப்பட்டைக்கு 'ஏ'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை படத்திற்கு வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும் வகையிலான 'ஏ' சான்றிதழை தணிக்கைக் குழுவினர் அளித்திருக்கின்றனர்.

சசிகுமார், வரலட்சுமி சரத்குமார், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தாரை தப்பட்டை. கரகாட்டக் கலையை மையமாகக்கொண்டு இப்படத்தை பாலா இயக்கியிருக்கிறார்.


Tharai Thappattai Gets A Certificate

இறுதிகட்ட பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தை தணிக்கைக் குழு அதிகாரிகளுக்கு திரையிட்டுக் காட்டினர். இந்தப் படத்தைப் பார்த்த அதிகாரிகள் படத்தின் சண்டைக் காட்சிகளில் வன்முறை இருக்கிறது.


மேலும் படத்தில் இடம்பெற்றிருக்கும் சில வசனங்களை நீக்கினால் யூ/ஏ சான்றிதழ் தருகிறோம் என்று கூறியிருக்கின்றனர். ஆனால் பாலா இதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டார்.


யூ சான்றிதழ் கிடைத்தால் அரசின் வரிவிலக்கு 30% கிடைக்கும். ஆனால் யூ/ஏ சான்றிதழ் பெற்றால் எதுவும் இல்லை என்பதால் அந்தக் காட்சிகளை நீக்க மாட்டேன் என்று பாலா கூறிவிட்டார்.இதனால் தாரை தப்பட்டை படத்திற்கு தணிக்கைக் குழுவினர் ஏ சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர். இளையராஜாவின் 1௦௦௦ மாவது படம் என்பதால் அவரது ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


சமீபத்தில் வெளியான தாரை தப்பட்டை பாடல்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகின்றது. பொங்கலுக்கு வெளியாகும் தாரை தப்பட்டை, விஷாலின் கதகளி, சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் மற்றும் உதயநிதியின் கெத்து ஆகிய படங்களுடன் மோதுகிறது.


தாரை தப்பட்டை படத்தின் டிரெய்லரை வருகின்ற புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.


English summary
Bala - Sasikumar's Tharai Thappattai Cleared with A Certificate. This Movie will be Release on Pongal Festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil