»   »  பொங்கலுக்கு காதைக் கிழிக்கப் போகிறது ‘தாரை தப்பட்டை’

பொங்கலுக்கு காதைக் கிழிக்கப் போகிறது ‘தாரை தப்பட்டை’

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள தாரை தப்பட்டை படம் பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரதேசி படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கி வரும் புதிய படம் தாரை தப்பட்டை. கிராமிய கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் இப்படத்தில் நாயகனாக சசிகுமாரும், நாயகியாக வரலட்சுமியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.


இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


பொங்கல் ரிலீஸ்...

பொங்கல் ரிலீஸ்...

எனவே, இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது தொடர்பாக படக்குழுவினர் ஏதும் கூறாமல் அமைதி காத்து வந்தனர்.


அறிவிப்பு...

அறிவிப்பு...

இந்நிலையில், இன்று அப்படத்தின் போஸ்டரில் படம் பொங்கலுக்கு ரிலீசாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொங்கல் ரேஸ்...

பொங்கல் ரேஸ்...

ஏற்கெனவே பொங்கல் ரேசில், விஷாலின் ‘கதகளி', சுந்தர்.சியின் ‘அரண்மனை-2', ஜெயம் ரவியின் ‘மிருதன்', சூர்யாவின் ‘24' ஆகிய படங்களும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த பட்டியலில் தாரை தப்பட்டையும் இணைந்துள்ளது.


எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

பாலா படம் என்றாலே ஒரு வித எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கும். அதிலும், இப்படம் இளையராஜாவின் 1000வது படம் என்பதால் இன்னும் கூடுதலாக எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறிக் கிடக்கிறது.
English summary
Tharai Thappattai movie produced by Bala’s B Studios has given rights to Ayngaran International, the film makers said that this Tamil Cinema will be released by Pongal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil