»   »  பாராட்டுகளை அள்ளும் மலையாளப் படம் 'தரங்கம்' - தனுஷ் ஹேப்பி!

பாராட்டுகளை அள்ளும் மலையாளப் படம் 'தரங்கம்' - தனுஷ் ஹேப்பி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : நடிகர் தனுஷ் மலையாளத்தில் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் முதன்முதலாகத் தயாரித்துள்ள படம் 'தரங்கம்'. கடந்த வியாழன் அன்று மலையாளத்தில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகரான டொவினோ தாமஸ் நடித்துள்ள இந்தப்படம் டார்க் காமெடி வகையை சேர்ந்த படமாக ஆக்‌ஷன் த்ரில்லர் என எல்லாம் கலந்துகட்டி உருவாகி இருந்தது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகைச் சேர்ந்தவர்களும் இந்தப்படத்தை ரசித்துப் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

Tharangam priased by fans - dhanush happy

இந்தப் படத்தை பார்த்த மலையாள நடிகரான லால், 'இதுவரை நாம் பார்த்து வந்த மலையாளப் படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட ஸ்டைலில் இந்தப்படம் உருவாகியுள்ளது. குடும்பத்துடன் சந்தோஷமாக பார்ப்பதற்கான படமாக இதை எடுத்திருக்கிறார்கள்' எனப் பாராட்டியுள்ளார்.

இந்தப்படத்தின் நாயகன் டொவினோ தாமஸை வைத்து இதற்கு முன் 'கோதா' என்கிற படத்தை இயக்கிய பஷில் ஜோசப் இந்தப்படம் பரிசோதனை முயற்சியாக எடுக்கப்பட்டு வெற்றியைப் பெற்றுள்ளது' எனப் பாராட்டியுள்ளார்.

Tharangam priased by fans - dhanush happy

மலையாளத்தில் தனது தயாரிப்பில் வெளியான முதல் படம் வெற்றி என்பதால் மகிழ்ச்சியடைந்துள்ள நடிகர் தனுஷ், படக்குழுவினருக்கும் பாஸிட்டிவ் விமர்சனங்களை முன் வைக்கும் மீடியாவுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

English summary
'Tharangam' is the first film produced by actor Dhanush in Malayalam. The film released last Thursday is welcomed by very positive reviews. Dhanush is happy with the success of his first Malayalam film release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil