Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ரொம்ப மரியாதை வச்சிருந்தேன்.. இனிமே சரியா வராது.. எல்லாமே பொய்.. மீண்டும் பரபரக்கும் தர்ஷன்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன், மீண்டும் தனது காதலி சனம் ஷெட்டி மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இலங்கையை சேர்ந்த மாடலான தர்ஷன், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
தர்ஷன், மாடலும் நடிகையுமான சனம் ஷெட்டியை காதலித்து வந்தார். காதலி இருக்கும்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான நடிகை ஷெரினுடன் நெருக்கமாக பழகினார்.

நிச்சயதார்த்தம்
இதனால் விமர்சனத்துக்கு ஆளானார் தர்ஷன். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனரிடம் சனம் ஷெட்டி புகார் அளித்தார். தனக்கும் தர்ஷனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு தன்னுடன் நிச்சயம் செய்த தர்ஷன், வெளியே வந்த பிறகு தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் கூறி நிச்சயதார்த்தம் நடந்ததற்கான ஆதாரங்களை வழங்கினார்.

பிகினி பிடிக்கல
மேலும் உடன் நடிக்கும் நடிகர்களுடன் தன்னை இணைத்து தவறான உறவு இருப்பதாகவும் தர்ஷன் பேசுவதாக கண்ணீர் மல்க கூறினார் சனம் ஷெட்டி, இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் தர்ஷன். சனம் பிகினியில் போட்டோ ஷுட் நடத்தியது தனக்கு பிடிக்கவில்லை என்றார்.

முன்னாள் காதலர்
தான் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சனம் ஷெட்டி அவருடைய முன்னாள் காதலருடன் இரவு முழுக்க பார்ட்டியில் இருந்ததாகவும் தனியறையில் தங்கியதாகவும் கூறினார். அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார். மேலும் தன்னை வைத்து படம் தயாரிக்க இருந்த தயாரிப்பாளர்களிடம் தன்னைப்பற்றி தவறாக பேசி வாழ்க்கையை அழிக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.

பிரிவதுதான் தீர்வு
இதேபோல் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதில் சில உறவுகள் தோல்வி அடைவதற்கு என்ன காரணமாக இருந்தாலும், அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவருக்கு அல்லது இருவருக்கு மகிழ்ச்சி இல்லை என்றால் பிரச்சினை சிக்கலாவதற்குள் இணக்கமாக பிரிவதுதான் தீர்வாக இருக்கும்.

அழிக்கப்பார்த்தார்
எந்தவொரு காரணத்திற்காகவும் ஒரு மகிழ்ச்சியற்ற உறவில் இருப்பது சரியல்ல, காயப்படுத்த எந்த நோக்கமும் இல்லை. அந்த நபர் மீது நிறைய மரியாதை வைத்திருந்தேன். ஆனால் எங்கள் உறவு ஆரோக்கியமானதாக இல்லை. அவர் எதார்த்தத்தை ஏற்கவில்லை. அவர் என்னை ஒழிக்க முயன்றார். அவரது குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை. இதனால் நான் மிகவும் வேதனை அடைகிறேன்.

நன்றியுள்ளவனாக இருக்கிறேன்
இந்த காரணங்களால் சோஷியல் மீடியாவில் இருந்து விலகி இருந்தேன். வாழ்க்கையில் பின்னடைவுகள் நிகழ்கின்றன, ஆனால் நான் இதிலிருந்து கற்றுக்கொண்டேன், இப்போது எதிர்காலத்திலும் எனது வாழ்க்கையிலும் கவனம் செலுத்தியுள்ளேன். எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இவ்வாறு தர்ஷன் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.