»   »  'அதனால்' தான் என்னை மீண்டும் நடிக்க அனுப்பிட்டாங்க போல: ஜோதிகா

'அதனால்' தான் என்னை மீண்டும் நடிக்க அனுப்பிட்டாங்க போல: ஜோதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காபி போடுகிறேன் என்று சொன்னால் கூட சூர்யா ஓடிவிடுகிறார். சமையல் தெரியாததால் தான் வேலைக்கு அனுப்பிட்டாங்கன்னு நினைக்கிறேன் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சூர்யா, கார்த்தி என மொத்த குடும்பமும் கலந்து கொண்டு ஜோதிகாவுக்கு ஆதரவு அளித்தது.


விழாவில் பேசிய ஜோதிகா கூறும்போது,


சூர்யா

சூர்யா

சூர்யா கார் வரை வந்து கதவை மூடிவிட்டு டாட்டா சொல்வார். சிறிய பட்ஜெட் படத்தில் நடிப்பதால் நான் தான் முதலில் செல்வேன். சூர்யா எனக்கு பிறகே ஷூட்டிங்கிற்கு செல்வார்.


பிரம்மா

பிரம்மா

இந்த பத்து வருஷத்துல கல்யாணத்துக்கு பிறகு என் புருஷனுக்கு நான் ஒரேயொரு தோசை மட்டும் தான் போட்டுக் கொடுத்தேன். அது தோசைக்கும், சப்பாத்திக்கும் இடையே வந்தது. அந்த தோசையை சாப்பிட்டதற்கு நன்றி சூர்யா.


காபி

காபி

நீ இனிமேல் தோசை சுட வேண்டாம் என அம்மா சொன்னாங்க. ஒரு காபி போடுகிறேன் என்று சொன்னால் கூட சூர்யா ஓடிவிடுகிறார். அதனால் தான் வேலைக்கு அனுப்பிட்டாங்கன்னு நினைக்கிறேன். சூர்யா இல்லை என்றால் இங்கு இருக்க முடியாது.


ஹீரோயின்

ஹீரோயின்

என்னை பொறுத்த வரைக்கும் ஒரு தமிழ் இன்டஸ்ட்ரியில ஒரு ஹீரோயினோட நிஜ வயசை விட கம்மியான வயசு ரோல் கொடுத்தவர் பிரம்மா தான். இதற்காக பிரம்மாவுக்காக கை தட்ட வேண்டும். 30 வயதுக்கு பிறகு ஹீரோயின்களை வயதானவர்களாக பார்க்கிறார்கள்.


தாய்

தாய்

12 அல்லது 14 வயது குழந்தைகளின் தாயாக நடிக்கும் கதாபாத்திரம் தான் என்னை தேடி வருகிறது. அப்படி இருக்கும்போது இப்படி ஒரு கதையை அளித்த பிரம்மாவுக்கு நன்றி என்றார் ஜோதிகா.


English summary
Jyothika jokingly said that Suriya has sent her back to work as she doesn't know how to cook.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil