Don't Miss!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Automobiles
தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கிராபிக்ஸ் வேலையில் சிக்கல்.. அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோகிறது 2.0?
சென்னை: கிராபிக்ஸ் வேலையில் ஏற்பட்டுள்ள சிக்கலால் 2.o படம் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.o. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.o படம் முழுக்க முழுக்க 3டி கேமராக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சி பணிகள் விரைவில் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகள் சென்னை மற்றும் லண்டனை சேர்ந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு சீல்
ஆனால் சில பிரச்சனைகளால் அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனங்கள் திவாலாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. படத்தின் முக்கிய பகுதிகள் அந்த நிறுவனங்களில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

தள்ளிபோகும் 2.o
இவற்றை வெளியே கொண்டுவர பெரிய தொகையை செலவிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகும் என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய படத்தில் ஒப்பந்தம்
இந்த காரணத்தால்தான் நடிகர் ரஜினிகாந்த் சன்பிக்ஸர்ஸின் படத்தில் ஒப்பந்தமாகி மளமளவென படபிடிப்பு வேலைகளை தொடங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு
ஏற்கனவே நவம்பர் 29ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டது. இந்நிலையில் 2.o படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோகும் என தகவல் வெளியாகிறது.