Just In
- 8 min ago
தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!
- 20 min ago
பேண்டை கழட்டி 'அதை' காட்டினார்.. பிரபல இயக்குநர் மீது யுனிவர்சிட்டி பட நடிகை பகீர் புகார்!
- 1 hr ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 1 hr ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
Don't Miss!
- Lifestyle
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- Sports
டெஸ்ட் தரவரிசை.... 4வது இடத்துக்கு இறங்கிய கேப்டன்... முதல் 50 இடங்களில் 8 இந்திய வீரர்கள்!
- News
ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாளை தரிசித்த கையோடு ஸ்டாலினுக்கு எதிராக அனலை கக்கிய முதல்வர்
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Automobiles
வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
15 வருசத்துக்குப் பிறகு மீண்டும் சந்தித்த கதிர், அனிதா.. பிளாஷ் பேக்குக்கு போன 7ஜி ரசிகர்கள்!
சென்னை: 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்த சோனியா அகர்வாலும், ரவி கிருஷ்ணாவும் 15 வருடங்கள் கழித்து, மீண்டும் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
காதலை கொண்டாடும் தமிழ் சினிமாவில், காதலே கொண்டாடிய படம் 7ஜி ரெயின்போ காலனி. செல்வராகவனின் படைப்புகளில் இன்றும் கொண்டாடப்படும் சினிமா அது.
15 வருடங்களுக்கு முன்பு பதின்பருவத்தில் இருந்த யுவன்களும், யுவதிகளும், அனிதாவையும், கதிரையும் மனதில் தாங்கி திரிந்திருப்பார்கள். காதலியை முதலில் கண்டபோது 'கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை' என முணுமுணுத்தன உதடுகள். அதே காதல் வலியை தந்தபோது, 'நினைத்து நினைத்து பார்த்தேன்' என சோக கீதம் பாடின.
எனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை.. பரபரக்க வைத்த அபிராமி.. சிக்கிக்கொண்ட மதுமிதா!
|
கதிர் அனிதா சந்திப்பு:
கட்டக்குரலில் பாடுபவர்களை கலாய்க்க இன்றைக்கும் நம்ம பசங்க பயன்படுத்துவது 'ராஜா ராஜாதி ராஜனென்ற ராஜா' சீனை தான். இப்படி நம்ம பசங்க மனசுல ஆழமா பதிஞ்சுபோன அனிதாவும் கதிரும் 15 வருஷம் கழிச்சு திரும்பவும் சந்திச்சு பேசியிருக்காங்க. இந்த சந்திப்பின் போது எடுத்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் சோனியா அகர்வால்.

இன்ப அதிர்ச்சி:
"பல வருடங்கள் கழித்து நேற்று இரவு நான் யாரை சந்தித்தேன் தெரியுமா... 7ஜி ரெயின்போ காலனி கதிரை. என்ன ஒரு சந்தோஷம். அனிதாவின் ஞாபகங்கள் மனதில் தோன்றின", என சோனியா தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அதில் ரவி கிருஷ்ணாவும் சரி, சோனியாவும் சரி 15 வருடங்களுக்கு முன்பு பார்த்த மாதிரியே இருந்தன.

காலத்தால் அழியாத காதல்:
இந்த டிவீட்டை பார்த்த நமக்கே இத்தனை ஞாபகங்கள் வருகிறதென்றால், உண்மையான கதிருக்கும் அனிதாவுக்கும் எத்தனை வந்திருக்க வேண்டும். சில படங்கள் காலத்தால் அழியாது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் 7ஜி ரெயின்போ காலனி. செல்வராகவனின் அனிதாவும், கதிரும் காலத்தால் அழியாத பிம்பங்கள்.
|
பிளாஷ் பேக்கிற்குப் போன ரசிகர்கள்:
சோனியாவின் இந்த டிவீட்டைப் பார்த்து 90ஸ் கிட்ஸ் தங்களது மலரும் நினைவுகளில் மூழ்கிப் போயுள்ளனர். ‘நானெல்லாம் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு ரெண்டு நாள் தூங்கவேயில்லை' எனப் பெண் ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் பல ரசிகர்கள் அப்படத்தில் இடம் பெற்றிருந்த பிரபலமான வசனங்களைப் பகிர்ந்துள்ளனர்.