யாரு சாமி இவன்?” ரஜினி வீட்டு முன்பு ரசிகர் செய்த அட்ராசிட்டி

சென்னை: தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.

தீபாவளி தினத்தில் தனது வீட்டு முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினி வாழ்த்துக் கூறிய வீடியோ வைரலாகி இருந்தது.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் ரஜினியின் வீட்டு முன்பு செய்த அட்ராசிட்டி பலரையும் தலைசுற்ற வைத்துள்ளது.

தீபாவளி வாழ்த்து

தீபாவளி வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடலூர் அருகே நடைபெற்று வந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பிய ரஜினிகாந்த், தனது குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார். மேலும், தனது வீட்டு முன்பு குவிந்திருந்த ரசிகர்களுக்கு அவர் வெளியே வந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது.

ரசிகர் அட்ராசிட்டி

ரசிகர் அட்ராசிட்டி

இந்நிலையில், ரஜினியின் ரசிகர் ஒருவர் செய்த அட்ராசிட்டி இணையத்தை கலங்கடித்து வருகிறது. ஈரோட்டில் இருந்து சென்னை வந்துள்ள ரசிகர் ஒருவர் ரஜினியின் வீட்டு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், "மது அருந்த கூடாது என ரஜினி ஒரு பாடலில் பாடியிருப்பார், அதனால் நான் அதை தொடுவதே இல்லை. அதேபோல், ரஜினி ரெஃபர் செய்த புத்தகங்களை தான் தினமும் படித்து தியானம் செய்கிறேன். அதன் பின்னர் தான் கோயிலுக்கு செல்கிறேன் ரஜினியை நினைத்து தான் எனது ஒவ்வொரு செயலையும் செய்கிறேன்" என அநியாயத்துக்கு கூவி உள்ளார்.

ஆனந்த கண்ணீர்

ஆனந்த கண்ணீர்

பேட்டிக் கொடுத்துகொண்டிருந்த போதே திடீரென தேவிதேவி அழுத அந்த ரசிகர், "சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம், அன்புன்னு எல்லாத்தையும் கொடுப்பது ரஜினி தான். அவர் முகத்தை பார்த்தாலே போதும் கருணை வந்துவிடும். யாருக்கும் எந்த துரோகமும் செய்ய வராது. நல்ல மனிதரான அவரை வாழ்க்கைல ஒருதடவையாவது பார்க்கணும்." எனக் கூறினார். இதெல்லாவற்றையும் விட இன்னொருபடி மேலே போன அந்த ரசிகர், ரஜினியின் வீடியோவை வீட்டில் ஓடவிட்டால் அவர் என் வீட்டில் இருப்பதே மாதிரியே நினைத்துக்கொள்வேன், அப்போது அவருடன் பேசுவது மாதிரியே இருக்கும்." எனக் கூறி ஆனந்த கண்ணீர் வடித்தார். அந்த ஆனந்த கண்ணீரை பார்த்தால், ரஜினியே மயங்கிருப்பாரோ என்னவோ.

முத்தம் கொடுத்த ரசிகர்

முத்தம் கொடுத்த ரசிகர்

தொடர்ந்து பேசிய அவர், "முதல்முறை வேலைக்குப் போகும் போது உழைப்பாளி படத்தில் வரும் பாடலை கேட்டு தான் சென்றேன். அதனால் சந்தோஷமா வேலைப் பார்த்தேன். நான் கஷ்டத்தில் இருக்கும் போதெல்லாம் தில்லு முல்லு படம் பார்த்து சிரித்துக்கொள்வேன்" என்றார். ஆனால், இனி ரஜினிக்கே கஷ்டம் வந்தால், இந்த ரசிகரின் வீடியோவைதான் பார்ப்பார் போல. அதுமட்டும் இல்லாமல் ரஜினி எங்கெல்லாம் சென்றாரோ அந்த இடத்தையெல்லாம் பார்த்து பரவசப்பட்டுக்கொள்வேன் என உணர்ச்சிப் பெருக்கெடுக்க புலம்பினார். அந்தளவிற்கு இறங்கி சம்பவம் செய்த ரசிகர், ஒருகட்டத்தில் ரஜினியின் வீட்டு கேட் முன்னால் சாஸ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கினார். அதோடு, ரஜினியின் பெயர் பலகையை பலதடவை தொட்டு முத்தம் கொடுத்த அவர், அதையும் வணங்கிவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ ரஜினி ரசிகர்களையே யார் சாமி இவன் என கேக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X