Don't Miss!
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- News
ஒரே வார்த்தை.. ‛வீக்’கான ஓபிஎஸ்.. உச்சத்தில் ஈபிஎஸ்..உச்சநீதிமன்ற உத்தரவால் அதிரடி திருப்பம்.. ஏன்?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார்... லீட் கொடுத்த ப்ரோமோ... ரிசல்ட் எப்போன்னு தெரியுமா?
சென்னை: 104 நாட்களை கடந்துவிட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளையுடன் முடிவுக்கு வருகிறது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் ஷிவின், விக்ரமன், அசீம் ஆகிய மூன்று பேர் மட்டுமே டைட்டில் வின்னர் ரேஸில் களத்தில் உள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு நாளை மாலை 6 மணிக்கு விடை தெரிந்துவிடும்.
இந்நிலையில், தற்போது வெளியான பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் பினாலேவுக்கான ப்ரோமோவில் டைட்டில் வின்னர் யார் என்ற லீட் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
டைட்டில் தனக்கு கிடைக்கலைன்னா.. பிக் பாஸையே உழுது விட்ருவாறு உழுது.. அசீமை விளாசிய ஆர்த்தி!

பிக் பாஸ் சீசன் 6
விஜய் டிவி ரசிகர்களின் ஃபேவரைட் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 6, அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6ல் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். விக்ரமன், அசீம், ஷிவின், மைனா, அமுதவாணன், கதிர் ஆகிய 6 பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்தனர். ஆனால் கதிர் ரூ.3 லட்சம் பண மூட்டையுடனும் அமுதவாணனும் 11.75 லட்சம் ரூபாய் பணப் பெட்டியுடனும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதேபோல், மைனாவும் மிட்வீக் எவிக்ஷனில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

டைட்டில் வின்னர் யார்?
இதனையடுத்து ஷிவின், விக்ரமன், அசீம் மட்டுமே பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரேஸில் இருக்கின்றனர். இந்த சீசனின் தொடக்கம் முதலே டாப்பில் இருந்தார் அசீம். ஆனால், அதன் பின்னர் விக்ரமனுக்கும் அவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தது. கடந்த வாரம் வரை இருவரும் சம பலத்தில் இருந்த நிலையில், சில தினங்களாக விக்ரமன் முன்னிலைக்கு வந்துள்ளார். அறம் வெல்லும் என்ற விக்ரமனின் டேக் லைன் பலரையும் சென்றடைந்துள்ளது. இதனிடையே இன்று காலை முதல் ஷிவினுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருவதால் டைட்டில் வின்னர் ரேஸில் விக்ரமனுக்கும் ஷிவினுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

நாளை கிராண்ட் பினாலே
ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தமாக இருந்த பிக் பாஸ் சீசன் 6, இறுதி 4 வாரங்களில் பல திருப்பங்களுடன் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்துள்ளது. எவிக்சன் ஆகவிருந்த அமுதா டிக்கெட் பினாலே டாஸ்க்கில் வென்று ரச்சிதாவை வெளியேற்றியது. வெறும் 3 லட்சம் பண மூட்டையுடன் கதிர் வெளியேறியது என பல சுவாரஸ்யங்கள் நடந்துமுடிந்தன. இந்நிலையில், விஜய் டிவியில் நாளை மாலை 6 மணிக்கு பிக் பாஸ் கிராண்ட் பினாலே ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராண்ட் பினாலே கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் என தெரிகிறது.

ரசிகர்கள் கணிப்பு
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்ற அறிவிப்பு நாளை தெரிந்துவிடும் என்பதால், ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேநேரம் பெரும்பாலான ரசிகர்கள் விக்ரமன் தான் டைட்டில் வெல்வார் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது வெளியான ப்ரோமோவின் தம்ப்னைல் பிக்சரிலும் விக்ரமன் கையெடுத்து கும்பிடும் போட்டோவை வைத்து லீட் கொடுத்துள்ளதாக ரசிகர்களே கணித்துள்ளனர். இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே விக்ரமன், ஷிவின் மீது ஹவுஸ்மேட்ஸ், ரசிகர்கள் யாருக்கும் பெரிய நம்பிக்கையே கிடையாது. ஆனால் அவர்கள் இருவரும் தான் இப்போது பிக் பாஸ் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளனர் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.