Don't Miss!
- Automobiles
சிஇஓ உடன் லடாய்! ஃபோக்ஸ்வேகன் தலைமை டிசைனர் டிஸ்மிஸ்! ஒரு காருக்கு இவ்வளவு அக்கப்போரா?
- News
என் கணவர் மரணம் தற்கொலை அல்ல.. இறப்புக்கு யார் காரணம்? டான்ஸர் ரமேஷின் மனைவி பரபரப்பு தகவல்
- Finance
கௌதம் அதானியை இனி காப்பாற்ற முடியாதா..? 10 பில்லியன் டாலர் மாயம்.. 7வது இடம்..!
- Technology
இனி சாம்சங் போனுக்கு வேலை இருக்காது போலயே! அதிநவீன பிளிப் போனை களமிறக்கும் Oppo: எப்போது அறிமுகம் தெரியுமா?
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
- Sports
ஓயாமல் குரல் கொடுத்த ரசிகர்கள்.. எம்.எஸ்.தோனி செய்த விஷயம்.. முதல் டி20ல் சுவாரஸ்ய சம்பவம்!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
மெட்ரோவில் தொடங்கிய வாரிசு ப்ரோமோஷன்... அடுத்து கபாலி ரஜினி ரூட்டில் விஜய்யின் அதிரடி பிளான்
சென்னை:
விஜய்
நடித்துள்ள
வாரிசு
திரைப்படம்
பொங்கலை
முன்னிட்டு
உலகம்
முழுவதும்
வெளியாகிற்து.
பொங்கல்
போட்டியில்
அஜித்தின்
துணிவு
படமும்
வெளியாவதால்,
வாரிசு
ப்ரோமோஷனில்
படக்குழு
தீவிரம்
காட்டி
வருகிறது.
வாரிசு
முதற்கட்ட
ப்ரோமோஷன்
மாஸாக
தொடங்கிய
நிலையில்,
அடுத்து
ஒரு
தரமான
சம்பவம்
செய்ய
விஜய்
முடிவு
செய்துள்ளாராம்.
திருமண
விழாவிற்கு
வாரிசு
ஸ்டைலில்
வந்த
விஜய்...இணையத்தில்
தீயாய்
பரவும்
போட்டோ!

வாரிசு ப்ரோமோஷன் ஸ்டார்ட்ஸ்
பீஸ்ட்டை தொடர்ந்து விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ளார். தில் ராஜூ தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள வாரிசு, பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. தற்போது அதெல்லாம் முடிவுக்கு வந்ததுடன் செம்ம மாஸான ப்ரோமோஷன்ஸ் தொடங்கியுள்ளது. முதலில் சென்னையில் இருந்து வாரிசு ப்ரோமோஷனை தொடங்கியுள்ளது படக்குழு.

சென்னை மெட்ரோவில் வாரிசு
அதன்படி, முதலில் சென்னை மெட்ரோ ரயில்களில் வாரிசு படத்தின் விஜய் போஸ்டர்களை ஒட்டியுள்ளது படக்குழு. விஜய் செம்ம மாஸாக ஸ்டைலிஷாக தோன்றும் இந்த வாரிசு போஸ்டர்கள், மெட்ரோ ரயில்களை வண்ணமயமாக அலங்கரித்துள்ளன. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே ரசிகர்கள் சார்பில் திரையரங்குகளில் வாரிசு பேனர்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மெட்ரோவிலும் வாரிசு போஸ்டர்கள் மாஸ் காட்டி வருகின்றன. இந்த வீடியோவை தமிழ்நாட்டு வாரிசு தியேட்டர் உரிமையை வாங்கியுள்ள 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது.

ரஜினி ரூட்டில் விஜய் முடிவு
இதனைத் தொடர்ந்து இன்னொரு மாஸ் ப்ரோமோஷனும் வாரிசு படத்திற்காக ரெடியாகி வருகிறதாம். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், பா ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் 2016ம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் போஸ்டர்களை விமானத்தில் ஒட்டி ப்ரோமோஷன் செய்யப்பட்டது. கபாலி படத்திற்காக செய்யப்பட்ட இந்த ப்ரோமோஷன் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இப்போது அதே பாணியில் வாரிசு படத்திற்கு ப்ரோமோஷன் செய்யவுள்ளார்களாம். விஜய்யும் அதே முடிவில் உள்ளதால், விரைவில் வாரிசு ப்ரோமோஷன்ஸ் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபாயில் வாரிசு ப்ரோமோஷன்?
முன்னதாக வாரிசு படத்தின் ப்ரோமோஷன் துபாயிலும் நடைபெறும் என சொல்லப்பட்டது. துபாயில் உள்ள புர்ஜ் கலிபா என்ற உலகின் மிகப் பெரிய கட்டடத்தில் வாரிசு ட்ரெய்லர் வெளியாகும் என செய்திகள் வெளியாகின. அதற்காக விஜய்யும் விரைவில் துபாய் பறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வாரிசு படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்து டீசர், ட்ரெய்லர் ஆகியவையும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.