For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக் பாஸ் வீட்டில் அசீம் – ஏடிகே மோதல்… யார் யாரை கார்னர் செய்கிறார்கள்?: குழப்பத்தில் ரசிகர்கள்

  |

  சென்னை: 40வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராஜா - ராணி டாஸ்க் நடைபெற்று வருகிறது.

  இதில், ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா ராஜா, ராணியாக பொறுப்பேற்றுள்ள நிலையில், அசீம் படைத் தளபதியாக விளையாடி வருகிறார்.

  இந்நிலையில், அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு தலைவராக உள்ள ஏடிகேவுக்கும் படைத்தளபதி அசீமிற்கும் இடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டுள்ளது.

  நம்ப வச்சு ஏமாதிட்டா.. ரச்சிதாவால் கண்கலங்கிய ராபர்ட் மாஸ்டர்.. என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில்? நம்ப வச்சு ஏமாதிட்டா.. ரச்சிதாவால் கண்கலங்கிய ராபர்ட் மாஸ்டர்.. என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில்?

  பிக் பாஸ் வீட்டில் புதிய சண்டை

  பிக் பாஸ் வீட்டில் புதிய சண்டை

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி ஆகியோர் வெளியேறிவிட்டனர். மீதமுள்ள 16 நபர்களுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது. அதேநேரம் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாகவும், நேருக்கு நேர் மோதிக் கொண்டவர்கள் நண்பர்களாகவும் வலம் வருகின்றனர். இந்நிலையில், இதுவரை நண்பர்களாக இருந்த அசீம் - ஏடிகே இருவரும் இப்போது பயங்கரமாக மோதி வருகின்றனர்.

  கண்ணீர் விட்ட ஏடிகே

  கண்ணீர் விட்ட ஏடிகே

  பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே சீரியல் நடிகர் அசீம் எல்லை மீறி நடந்து வருவதை பார்க்க முடிகிறது. ஆயிஷா, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி, தனலட்சுமி என வரிசையாக எல்லோரிடமும் வம்பிழுத்து வரும் அசீம், ஏடிகே, மணிகண்டன், கதிர் ஆகியோரிடம் க்ளோஸாகவே பழகி வருகிறார். இதனிடையே பொம்மை டாஸ்க்கில் அசீம் சொல்வது தான் உண்மை என நம்பிய ஏடிகே, அது பொய் எனத் தெரிந்ததில் இருந்து அசீமிடம் இருந்து விலகியே உள்ளார். சென்றவாரம் கூட ஒருசில இடங்களில் அசீமுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து வந்த ஏடிகே, இந்த வாரம் சண்டை முற்றியதில் அழுதேவிட்டார்.

  யார் யாரை டார்க்கெட் செய்கிறார்கள்?

  யார் யாரை டார்க்கெட் செய்கிறார்கள்?

  ராஜா - ராணி டாஸ்க்கில் முதலில் எச்சை துப்பி சாப்பாடு தந்தால் சாப்பிடுவியா என விக்ரமனிடம் வம்பிழுத்தார் அசீம். அதன் பின்னர் கஜானாவை நிரப்பும் டாஸ்க்கில், அசீம் கொடுத்த கட்டளையை ஏற்று தான் கதிர் பொருட்களை திருடுகிறார் எனத் ஏடிகேவுக்கு தெரியாது. ஆனால், கதிரை காப்பாற்றுவதற்காக ஏடிகே தான் கஜானாவை திருடினார் என அசீம் சீண்ட, அது பெரிய சண்டையை தொடங்கி வைத்தது. இரவு முழுவதும் தூங்காமல் பொருட்களை பாதுகாத்தை என்னை திருடன் என்று எப்படி கூறுவாய் என அசீமிடம் சண்டை போட்டார் ஏடிகே.

  ஸ்கெட்ச் யாருக்கு?

  ஸ்கெட்ச் யாருக்கு?

  இந்த விவகாரம் மெல்ல மெல்ல பகையாக மாற, ஏடிகே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இதுபற்றி பேசத் தொடங்கினார் அசீம். சாப்பிடும் போது எப்படி கேள்வி கேட்பாய் என மீண்டும் அசீமிடம் எகிறினார் ஏடிகே. நேற்று இரவு இந்த சண்டை பெரிதாகிக் கொண்டே போக, இன்று இன்னும் ஒருபடி மேலே சென்றது. அசீமை எல்லோரும் சேர்ந்து ட்ரிக்கர் செய்வதால், அவர் ஏடிகேவை ட்ரிக்கர் செய்த மற்றவர்களின் கவனத்தை திருப்புவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அதேபோல், இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த ஏடிகே, இப்போது அசீம்க்கு ரசிகர்களிடம் ஆதரவு அதிகரித்து வருவதால், அவரை தூண்டிவிட முயற்சிப்பதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன. எப்படி இருந்தாலும் நாளை அகம் டிவி வழியே கமல் போட்டியாளர்களை சந்திக்கும் போது இந்த வாரம் நடந்த பல சண்டைகளுக்கு பஞ்சாயத்து நடக்கும் என தெரிகிறது.

  English summary
  Bigg Boss is going on for the 40th day. There has been a lot of conflict between Azeem and ADK for the past two days. The fight between Azeem and ADK has created confusion among the fans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X