Conjuring The Last Rites Day 3 Box Office: கான்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ் 3 நாள் வசூல்.. மதராஸியை வீழ்த்தியது!
சென்னை: எட் மற்றும் லோரெய்ன் வாரன் ஆகிய நிஜ வாழ்க்கை அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்களை மையமாகக் கொண்ட பிரபலமான ஹாரர் படமான 'தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்’, இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடி வசூலித்து பெரும் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் இந்த திரைப்படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ரூ. 17.5 கோடி நிகர வசூலுடன் வெளியான இத்திரைப்படம், சனிக்கிழமை அன்றும் அதே ரூ. 17.5 கோடியை வசூலித்து தனது வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டது. ஞாயிற்றுக்கிழமை வசூல் சற்று குறைந்தாலும், ஆரம்ப மதிப்பீடுகளின்படி ரூ. 15.5 கோடி ஈட்டியது. இதன்மூலம், மூன்று நாட்களில் மொத்தம் ரூ. 50.50 கோடியை இப்படம் வசூலித்தது.

சாக்னிக் (Sacnilk) தகவல்படி, ஆங்கிலப் பதிப்பு சுமார் ரூ. 27.55 கோடி வசூலித்தது, இந்தி டப்பிங் பதிப்பு சுமார் ரூ. 18.73 கோடியும், தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகள் இணைந்து சுமார் ரூ. 3 கோடியும் வசூலித்தன.
கடந்த வாரம் வெளியான மற்ற இந்திய படங்களை விட அதிக வசூலை ஈட்டி, 'லாஸ்ட் ரைட்ஸ்' திரைப்படம், இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் ஹாரர் படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 'தி கன்ஜூரிங் 2' (ரூ. 61.80 கோடி) மற்றும் 'ஃபைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்' (ரூ. 62.12 கோடி) ஆகிய படங்களுக்குப் பின்னால் இது உள்ளது. இந்தப் புதிய மைல்கல்லை வெளியான முதல் வார இறுதியிலேயே இப்படம் எட்டியது குறிப்பிடத்தக்கது.
பேட்ரிக் வில்சன் மற்றும் வேரா ஃபார்மிகா ஆகியோர் எட் மற்றும் லோரெய்ன் வாரன் கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர். இந்த முறை ஒரு குடும்பத்தின் வீட்டை அச்சுறுத்தும் ஒரு பயங்கரமான பேயை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இப்படம் பாலிவுட் வெளியீடுகளான 'பாகி 4' மற்றும் 'தி பெங்கால் ஃபைல்ஸ்' ஆகியவற்றை வசூலில் முந்தியுள்ளது.

டைரக்டர் ஷெர்ரிஃப் இயக்கிய 'பாகி 4' திரைப்படம் மூன்று நாள் வார இறுதியில் ரூ. 31.25 கோடி மட்டுமே வசூலித்து தடுமாறியது. அதே சமயம், அரசியல் நாடகமான 'தி பெங்கால் ஃபைல்ஸ்' ரூ. 6.65 கோடி மட்டுமே ஈட்டியது. 'லாஸ்ட் ரைட்ஸ்' திரைப்படம், பத்து நாட்களில் ரூ. 46 கோடி வசூலித்த காதல் நாடகமான 'பரம் சுந்தரி' படத்தையும் முந்தியுள்ளது.
சர்வதேச அளவில், 'லாஸ்ட் ரைட்ஸ்' திரைப்படம் உலகளவில் $187 மில்லியன் வசூலித்து phenomenal ஆன துவக்கத்தைப் பதிவு செய்தது. உள்நாட்டு வசூலில் $83 மில்லியனுடன் வாராந்திரப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதில் வெள்ளிக்கிழமை $34.5 மில்லியன் மற்றும் வியாழக்கிழமை முன்னோட்டக் காட்சிகளிலிருந்து $8.5 மில்லியன் என்ற சாதனையும் அடங்கும். இது தொடரின் வரலாற்றில் சிறந்த துவக்கத்தைக் குறிக்கிறது, மேலும் எல்லா காலத்திலும் மூன்றாவது பெரிய திகில் படத்தின் துவக்கமாகவும் இது உள்ளது.

ஓவர்சீஸில், இப்படம் $50 மில்லியன் என்ற கணிப்பை மீறி $104 மில்லியன் வசூலித்து, எதிர்பார்ப்புகளைத் தாண்டியது. இப்படத்தின் வலுவான வசூல் உலகளாவிய துவக்கத்தை $187 மில்லியனுக்கு உயர்த்தியது. இது $55 மில்லியன் தயாரிப்பு பட்ஜெட்டை (மார்க்கெட்டிங் தவிர்த்து) வெகுவாக மிஞ்சியது. மேலும், திகில் திரைப்படமான 'இட்: சாப்டர் டூ' ($92.5 மில்லியன்) வசூலை முறியடித்து, ஒரு திகில் படத்திற்கான மிகப்பெரிய வெளிநாட்டு துவக்கத்திற்கான புதிய சாதனையை இப்படம் படைத்துள்ளது.
தமிழில் வெளியான சிவகார்த்திகேயனின் மதராஸி படம் 3 நாட்களில் இந்தியளவில் 36 கோடி வசூல் செய்த நிலையில், கான்ஜூரிங் கடைசி பாகம் 3 நாட்களில் 50 கோடி வசூலை அசால்ட்டாக கடந்துள்ளது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து படங்களுக்கும் பாக்ஸ் ஆபீஸில் பயத்தை காட்டியுள்ளது இந்த கான்ஜூரிங் பேய்.


Click it and Unblock the Notifications











