The Conjuring Last Rites Review: பேய்க்கே போரடிச்சிடுச்சு.. கான்ஜூரிங் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: செப்டம்பர் 5ம் தேதி வெளியான "தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்" திரைப்படம் பார்வையாளர்களுக்கு திகிலை காட்டிலும் ஏமாற்றத்தையே அதிகம் அளித்தது. வழக்கமான பேய் விரட்டும் கதையாக இல்லாமல், குடும்பக் கதையாக ஆரம்பித்து திசை மாறியதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
படத்தின் ஆரம்பத்தில், கதாநாயகியின் இளமை பருவத்தையும், கர்ப்பிணியாக இருக்கும்போது கண்ணாடி மூலம் எதிர்கொள்ளும் பயங்கரமான சம்பவத்தையும் காட்டுகிறார்கள். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதே நேரத்தில், ஒரு வீட்டில் நடக்கும் பிறந்தநாள் விழாவில், இவருக்கு பரிசாக அந்த கண்ணாடி வழங்கப்படுகிறது.

கதை பேய் விரட்டும் களத்திற்கு வருவதற்கு முன், கதாநாயகியின் மகள் ஒரு பையனை காதலிக்கிறாள். அந்தக் காதலை அப்பா எதிர்க்கிறார். ஊர் பஞ்சாயத்து வரைக்கும் போகிறது. இதனால் இது பேய் படமா இல்லை குடும்பக் கதையா என ரசிகர்கள் குழம்பிப் போனார்கள்.
வழக்கமாக கான்ஜுரிங் படங்களில், பேய் இருப்பதாக தெரிந்து புருஷனும் பொண்டாட்டியும் அங்கு சென்று பேய் ஓட்டுவார்கள். ஆனால் இந்தப் படத்தில், கதைக்களம் திசை மாறி குடும்பப் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில், குடும்பம் முக்கியமில்லை கடமைதான் முக்கியம் என நினைத்து கதாநாயகன் பேய் ஓட்ட செல்கிறார். பைபிள் எடுத்து, தண்ணி தெளித்து பேய் ஓட்டுகிறார். ஆனால் அதில் புதுமை ஏதும் இல்லாததால், பேய்க்கே போர் அடித்து ஓடிப்போகிறது.

இதுவரை வந்த கான்ஜுரிங் சீரீஸில் ஏதாவது நாலு சீன்களாவது சொல்லும்படியாக இருக்கும். ஆனால் இந்த படம் அந்த வரிசையில் இடம்பெறவில்லை. இயக்குநர் இழுத்து மூடிவிட்டதாக ப்ளூ சட்டை மாறன் பங்கம் பண்ணியுள்ளார்.
"லாஸ்ட் ரைட்ஸ்" என்று பெயர் வைத்துவிட்டு, ரொம்ப ராங்கான படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததாக கூறியுள்ளார். தி கான்ஜூரிங் லாஸ்ட் ரைட்ஸ் படத்துக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது. இந்தியாவிலேயே 21 கோடிக்கும் அதிகமான வசூலை கான்ஜூரிங் படத்தின் கடைசி பாகமான இந்த படம் அள்ளியிருக்கிறது. ஆனால், உலகளவில் இந்த படத்துக்கு பயங்கரமான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், முதல் வாரத்தை தாண்டி படம் வசூல் செய்யுமா? என்பது கேள்விக்குறியாகவே மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











