»   »  கபாலி தொடங்கி வைக்கும் கவுன்டவுண்!

கபாலி தொடங்கி வைக்கும் கவுன்டவுண்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டின் மத்தியில் இருக்கிறோம். கடந்த அரையாண்டில் இதுவரை ரிலீஸ் ஆன படங்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் மிகக் குறைவு. ஆனால் கபாலி ரிலீஸுக்கு பின்னர் சுமார் ஒரு டஜன் பெரிய படங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன.

கபாலி

கபாலி

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் கபாலி படம் ஜுலை 22 ரிலீஸ் ஆகிறது. இதுவரை எந்த இந்திய படத்துக்கும் இல்லாத அளவில் தியேட்டர் எண்ணிக்கை கூடிக் கொண்டே போவதால் வசூலில் உலக சாதனைப் படைக்கலாம். கபாலி ரிலீஸுக்கு பின்னர் காத்திருக்கும் படங்களை பார்ப்போம்.


தொடரி

தொடரி

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கியிருக்கும் படம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. ரயில், தீவிரவாதம், குண்டுவெடிப்பு என்று இதுவரை தொடாத அளவுக்கு பெரிய கதைக் களத்தை தேர்ந்தெடுத்திருப்பதால் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.


பிரபுசாலமன் படங்கள் ரெவென்யூவில் மட்டுமல்லாது ரிவ்யூவிலும் சூப்பர் என்று பெயரெடுக்கும். அதை தொடரி தக்க வைக்கிறதா என்று பார்ப்போம்.
அச்சம் என்பது மடமையடா

அச்சம் என்பது மடமையடா

விடிவிக்கு பிறகு சிம்பு - கவுதம் மேனன் இணைந்திருக்கும் படம். ஏஆர்.ரஹ்மான் இசையில் தாமரை எழுதி வெளியான இரண்டு பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள் ஆகிவிட்டன. இளைஞர்களின் பல்ஸ் தெரிந்த கவுதம் மேனனின் படம் என்பதால் யூத்களிடம் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தர்மதுரை

தர்மதுரை

ரஜினியின் சூப்பர் ஹிட் டைட்டிலை வைத்ததாலேயே படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு ஏறியுள்ளது. விஜய்சேதுபதி, மூன்று ஹீரோயின்கள், இயக்கம் சீனு ராமசாமி என்பதெல்லாம் வியாபாரத்துக்கும் விமர்சனத்துக்கும் தீனியாக அமையுமா? என பார்ப்போம்.


திருநாள்

திருநாள்

டைட்டிலை எந்த நேரத்தில் திருநாள் என வைத்தார்களோ... படம் முடிந்தும் கூட ரிலீஸ் திருநாளுக்காக காத்திருக்கிறது. ஜீவா - நயன்தாரா காம்பினேஷன், ஜீவாவின் வித்தியாச தோற்றம், வாயில் பிளேடுடன் நயன் என ரசிகர்களை ஈர்க்கும் எல்லாம் இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் இரண்டு பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.


கொடி

கொடி

தனுஷ் த்ரிஷா அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் மிக வேகமாக வளர்ந்த படம். இயக்கம் எதிர் நீச்சல் செந்தில் குமார். முதன் முறையாக தனுஷுக்கு இரட்டை வேடம், அரசியல் த்ரில்லர், ஒரு வேடம் போலீஸ் என்றெல்லாம் நம் பல்ஸை எகிற வைக்கிறார்கள்.


எஸ்3

எஸ்3

சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்து டைட்டில். தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஒரு கதை மூன்றாவது பாகத்துக்கு நகர்ந்திருக்கிறது. காரணம் முதல் இரண்டு படங்கள் தந்த சக்சஸ். சூர்யா ஹரி ஸ்ருதிஹாசன் என மூன்று தூண்கள் படத்தை தாங்குகின்றன. தீபாவளி ரேஸில் எஸ்3 களம் இறங்கும் என தெரிகிறது.


இருமுகன்

இருமுகன்

விக்ரம் நயன் தாரா நித்யாமேனன் என காஸ்டிங்கே எகிற வைக்கிறது. இரு வேடங்களில் நடிக்கிறார் விக்ரம். தமிழில் இதுவரை உளவாளி கதைகள் வந்ததில்லை. அந்த குறையை போக்க அக்டோபரில் வருகிறான் இருமுகன். உலக அளவில் நடக்கும் கதை என்பதால் ஃபாரீன் லொக்கேஷன்களும் மனதை கவரும் என்கிறார்கள்.


காஷ்மோரா

காஷ்மோரா

டைட்டிலே வித்தியாசமாக பிடித்திருக்கிறார்கள். கார்த்தி, நயன் தாரா, ஸ்ரீதிவ்யா காம்பினேஷனில் சரித்திரம் வரை பயணிக்கும் ஒரு பில்லி சூனிய படமாம். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கோகுல் இயக்கம். தீபாவளிக்கு களம் இறங்கும் காஷ்மோராவில் பல காட்சிகள் பிரமிக்க வைக்கும் என்கிறார்கள்.


தேவி

தேவி

நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவா ஹீரோவாக அதுவும் இன்னொருவர் இயக்கத்தில் நடிக்கும் படம். இதுவும் பேய் படம் போலவே தெரிகிறது. நயன்தாராவுடனான பிரபுதேவாவின் காதல், மோதல்கள் தான் படத்தின் கதை எனசெய்திகள் வந்ததால் படத்துக்கு இப்போதே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


ரெமோ

ரெமோ

சிவகார்த்திகேயன் - பிசி.ஸ்ரீராம் - ரசூல் பூக்குட்டி என ஆரம்ப காம்பினேஷனே அள்ளியது. பெண் வேட கெட்டப் வந்ததும், ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டையே இக பிரம்மாண்டமாக நடத்தியதும் படத்துக்கு பெரிய பூஸ்டர்ஸ். செப்டம்பரில் ரெமோ வருவான் என்கிறார்கள்.


விஜய்60

விஜய்60

விஜய்யின் அடுத்த படம். பரதன் இயக்கம், கீர்த்தி சுரேஷ் ஜோடி என்பதை விட விஜய்க்கு இரட்டை வேடங்கள், கல்லூரி மாணவர் கெட்டப், நெல்லை ஸ்லாங் என படத்துக்கு இப்போதே ஹைப்.


வெயிட்டிங் பார் கபாலி

வெயிட்டிங் பார் கபாலி

இவற்றில் சில படங்களுக்கு ஃபர்ஸ்ட் லுக்குகள் வெளியிடப்பட்டுவிட்டன. சில படங்கள் முடிந்தும் கூட ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிடப்படவில்லை. காரணம் கபாலி... எந்த செய்தி வந்தாலும் அதை தூக்கி சாப்பிட்டுவிட்டு கபாலி ஏப்பம் விடுவதால் கபாலிக்காக தான் எல்லா ஹீரோக்களுமே வெய்ட்டிங்!


English summary
All the medium or big movies in Tamil cinema are waiting for the release of Rajinikanth's Kabali .
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil