வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான போட்டோக்கள்: விஜய்க்கும் சேர்த்து ரூல்ஸ் போட்ட இயக்குநர்

ஐதராபாத்: விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

Recommended Video

Vijay எடுத்த துணிச்சலான முடிவு, ரசிகர்களுக்கு இது Shocking Update தான்

வம்சி பைடிபல்லி இயக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

'வாரிசு' சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் கசிந்து வருவதால், இயக்குநர் புது ரூல்ஸை போட்டுள்ளார்.

பீஸ்ட் மோடில் இருந்து வாரிசு

பீஸ்ட் மோடில் இருந்து வாரிசு

'மாஸ்டர்', ‘பீஸ்ட்' என அடுத்தடுத்து ஆக்சன் படங்களில் நடித்த விஜய், தற்போது ‘வாரிசு' படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்திலும் ஆக்சன் காட்சிகள் அமர்க்களமாக இருக்கும் என்றாலும், ‘வாரிசு' முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. வம்சி பைடிபல்லி இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகிறது.

பெரிய நட்சத்திரக் கூட்டணி

பெரிய நட்சத்திரக் கூட்டணி

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் ‘வாரிசு' படத்தின் சூட்டிங், கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், சங்கீதா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே ‘வாரிசு' படத்தில் நடித்து வருகின்றனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

சூட்டிங் ஸ்பாட்டில் லீக்கான போட்டோஸ்

சூட்டிங் ஸ்பாட்டில் லீக்கான போட்டோஸ்

'வாரிசு' படத்தின் சூட்டிங் தொடங்கியதில் இருந்தே, இதன் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களை குஷிப்படுத்தும் விதமாக, விஜய்யின் பிறந்தநாளில் ‘வாரிசு' டைட்டில் அறிவிப்புடன், போஸ்டர்களும் வெளியானது. அதன்பிறகு இன்னும் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனிடையே, வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள், அடுத்தடுத்து லீக்காகின. இதனால் படக்குழு கடும் அதிர்ச்சியடைந்தது.

டைரக்டர் போட்ட புது ரூல்ஸ்

டைரக்டர் போட்ட புது ரூல்ஸ்

போட்டோக்கள் மட்டும் இல்லாமல் ‘வாரிசு' ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோக்களும் லீக்காகின. படக்குழுவினர் மட்டுமின்றி ரசிகர்களும் ஷாக்கினர். இதனால், படத்தின் இயக்குநர் வம்சி பைடிபல்லி, இப்போது அதிரடியாக முடிவெடுத்துள்ளாராம். இனிமேல் விஜய் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் யாரும், ‘வாரிசு' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்போன்கள், கேட்ஜெட்டுகள் எடுத்துவரக் கூடாது என புது ரூல்ஸ் போட்டுள்ளாராம். இதனால், இனிமேல் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியாகாது என, விஜய் ரசிகர்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X