twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காஃபி ஷாப்பில் பர்மா பசார் போல கடை விரித்து வாணி போஜனை மிரள வைத்த இயக்குநர்

    |

    சென்னை: அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் மிரள்.

    ஆக்ஸிஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

    இந்நிலையில் இயக்குநர் சக்திவேல், நடிகர் பரத் மற்றும் நடிகை வாணி போஜன் இந்தப் படம் குறித்து பேட்டி ஒன்றை கொடுத்துள்ளனர்.

    Bigg Boss Tamil 6: அசீம் நிஜமாவே ஒரு ’சள்ளை’ தான்.. என்ன கமல்ஹாசனே இப்படி சொல்லிட்டாரே! Bigg Boss Tamil 6: அசீம் நிஜமாவே ஒரு ’சள்ளை’ தான்.. என்ன கமல்ஹாசனே இப்படி சொல்லிட்டாரே!

    மிரள்

    மிரள்

    இந்தக் கதைக்களம் அனைவரையும் பயமுறுத்தும், மிரள வைக்கும். எனவேதான் படத்திற்கு மிரள் என்கிற தலைப்பு வைத்துள்ளோம். ஹாரர் திரில்லர் ஜானரை மக்கள் நிறைய பார்த்திருப்பார்கள். ஆனால் இந்தக் கதைக்களம் காற்றாலை இருக்கும் பகுதியில் நடக்கிறது. அந்தப் பகுதியும், அங்கிருக்கும் சத்தமும் கதைக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் அமைந்துள்ளது. தினமும் மாலை 6 மணிக்கு துவங்கி காலை 6:00 மணி வரை படப்பிடிப்பை நடத்தினோம் என்று கூறியிருக்கிறார்கள்.

    கே.எஸ்.ரவிக்குமார்

    கே.எஸ்.ரவிக்குமார்

    இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் வாணி போஜனுக்கு தந்தையாக நடித்துள்ளார். அவர் அனுபவம் வாய்ந்த இயக்குநர் என்பதால் படப்பிடிப்பில் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். அவரைப் போன்ற மூத்த கலைஞர்கள் நடிக்கும்பொழுது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பார்கள். உடன் வேலை செய்பவர்களுக்கும் ஒரு விதமான பாசிட்டிவ் எனர்ஜியை கொடுத்து படப்பிடிப்பில் புரிதலோடு இருப்பார்கள் என இயக்குநர் சக்திவேல் கூறியிருக்கிறார்.

    பாவம் புண்ணியம்

    பாவம் புண்ணியம்

    பரத் பேசும்பொழுது, தான் பல ஆண்டுகளாக ஒரே தொலைபேசி எண்ணைதான் வைத்திருக்கிறார் என்றும் இயக்குநர்களோ தயாரிப்பாளர்களோ என்னை அணுகுவதில் எந்தப் பிரச்சனையும் கிடையாது எனவும் கூறியுள்ளார். மேலும், புதுமுக இயக்குநனர்களுடன் நிறைய படங்கள் வேலை பார்த்துள்ளேன். அவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று மெனக்கிடுவார்கள். அதற்காக அனைவருக்கும் பாவம் புண்ணியம் பார்த்தால் என்னுடைய சினிமா வாழ்க்கையும் சுமுகமாக இருக்காது. அதனால் அறிமுக இயக்குநர்கள் நல்ல கதையோடு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று பரத் கூறியிருக்கிறார்.

    பர்மா பசார்

    பர்மா பசார்

    தயாரிப்பு தரப்பிலிருந்து ஒரு கதை கேட்கச் சொன்னதால் இயக்குநரை ஒரு காஃபி ஷாப்பில் சந்தித்தேன். நான் சென்றதும் அவர் தனது பையிலிருந்து பொம்மைகள், கார்கள், சார்ட் என பலவற்றை எடுத்து டேபிளில் வைத்தார். பார்ப்பதற்கு பர்மா பசாரில் கடை வைத்திருப்பவர் போல் இருந்தார். அங்கிருந்தவர்கள் எங்களையே பார்த்தார்கள். அதன் பின்னர்தான் கதையை கூறினார். அவர் கூறிய விதமும் கதையும் எனக்கு பிடித்திருந்ததால் இடைவேளை காட்சிகளை சொல்லும்போதே, நான் கண்டிப்பாக நடிக்கிறேன் வேறு யாரிடமும் கதையை கூறிவிடாதீர்கள் என்று நடிக்க சம்மதித்ததாக வாணி போஜன் கூறியுள்ளார்.

    English summary
    Miral is a movie starring Bharat and Vani Bhojan directed by debutant Shaktivel. Axis Film Factory and Shakti Film Factory have produced this film. In this case, director Sakthivel, actor Bharat and actress Vani Bhojan have given an interview about this film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X